லண்டன்: மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக பணியாற்றிய பெண் நடுவானில் விமானத்தில் பயணியுடன் உறவு கொண்டு கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக இருந்த பெண் ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பயணி ஒருவருடன் கழிப்பறையில் உறவு கொண்டு கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் விமானத்தில் செல்லும்போது எல்லாம் பயணிகளுடன் உறவு கொண்டு அதற்கு பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் அவர் வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களையே தேர்வு செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் விமானத்தில் ஏறி இறங்கினால் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் சம்பாதித்து வந்துள்ளார்.

அவர் பயணிகளுடன் உறவு கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.6 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் சம்பாதித்து உள்ளார்.

பயணிகளுடன் உறவு கொண்டு சம்பாதித்து வந்த அந்த பெண் பணிநீக்கம் செய்த கையோடு நாடு கடத்தப்பட்டுவிட்டாராம்.

முன்னதாக ஜப்பானில் விமான சிப்பந்தி வேலை செய்த பெண்கள் போதிய ஊதியம் கிடைக்காததால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply