மும்பையில் யார் ஆதிக்கம் செலுத்துவது,யார் அதிகாரம் செய்வது என்கிற அதிகார போட்டி நிலவி வந்தது. தாதாக்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு மேனரிசம் வைத்துக்கொண்டு இருந்தனர்.
எல்லா தாதாக்களும் தங்களுக்கு என்று உடைகள், ஷூ, கூலிங் கண்ணாடி, சிகரெட் என்று அவர்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் மிக விலையுர்ந்த பொருட்களாக இருந்தது. அவர்கள் அதை பெருமையாக தனித்துவமாக கருதினார்கள்.
ஆனால் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார்களுக்கு தாதாக்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தின் மணம், ஷீ தடம், சிகரெட் துண்டுகள் என்று நுகர்பவவை, கிடைப்பவையை வைத்து மும்பையில் நடக்கும் மோசமான கிரைம்களை எந்த டீம் செய்தார்கள் என்று ஸ்மெல் பண்ண வசதியாக இருந்தது.
தாவூத்தின் நண்பன் கொலை வழக்கிலும் அப்படிதான் கண்டுபிடித்தனர். எந்த குரூப் செய்தது என்று கண்டுபிடித்தனர். ஆனால் யார், யார் செய்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள்.
தாவூத் டீமில் யார் செய்தார்கள் என்று அவர்களும் அவர்கள் பங்கிற்கு தேடினார்கள். துப்பு கிடைக்கவில்லை. ஆனால் தாவூத்தின் தொழிலில் மாற்றம் இல்லை.
அளவிற்கு அதிகமாக பணமும் அதிகாரமும் குவிந்தது. தாவூத்திற்க்கு இப்பொழுது போலீஸ் வட்டாரங்களில் உளவு சொல்ல ஆட்கள் இருந்தார்கள்.
அவர்கள் சொல்லும் செய்தியைப் பொறுத்து தாவூத் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் கட்டுக்களை அள்ளி வீசினான். அதனால் பல்வேறு அதிகாரிகள் அவனுக்கு நெருக்கமாக வலம் வந்தனர்.
சில மாதங்கள் ஓடின. தாவூத் நண்பனை நான்தான் கொலை செய்தேன் என்று பாட்லா என்பவன் உள்ளூர் சாராய கடைகளில் சொல்லி மிரட்டி வந்தான்.
அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு எல்லோரையும் கொடூரமாக தாக்கி வந்தான். யாரிடமும் இரண்டு மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசமாட்டான். கத்தியை காட்டி மிரட்டுவதும் அடிப்பது, கீழே தள்ளி கழுத்தில் மிதிப்பது போன்ற கொடூரமான செயல்களை செய்து வந்தான்.
அவனைப்பற்றி தாவூத்திற்கு தெரிய வந்ததும் தாவூத்தும் அவனது ஆட்களும் வழக்கமாக அவன் வரும் கடைக்கு சென்றார்கள். குடித்து விட்டு பணம் கொடுக்காமல் பல முறை சென்றுவிடுவான். அதனால் அவனிடம் எந்த சர்வரும் ஆர்டர் எடுக்க வரமாட்டார்கள்.
பாட்லா வந்ததும் அவனது நடவடிக்கைகளை பார்த்து எரிச்சலான தாவூத்தின் ஆட்கள் அவனை பாட்டிலால் தாக்கினார்கள்.
நிலை குலைந்து போன பாட்லா அப்படியே சரிந்து விழுந்தான். அதோடு விடாமல் அவன் கழுத்தில் கத்தியை வைத்து முகத்தில் கத்தியால் கோடு போட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவனை கத்தியால் கிழித்துக்கொண்டு இருந்தனர். இருந்தாலும் பாட்லா அசரவில்லை.
இறுதியாக அவனது வலது கையில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றையும் கத்தியால் நறுக்கினார்கள். இந்த காட்சியைக் கண்டு பாரில் குடிக்க வந்தவர்கள் சிதறி ஓடினர்.
ஒரு சிலர் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டு நடந்தவற்றை பார்த்துக்கொண்டு இருந்தனர். வந்திருப்பது தாவூத் இப்ராஹீம் என்பதை தெரியாத சிலர் பாரில் கலாட்டா என்று காவல்துறைக்கு போன் செய்தார்கள்.
போலீஸ் வந்து சேர்வதற்குள் பாட்லாவின் கையில் உள்ள அனைத்து விரல்களும் துண்டாக நறுக்கப்பட்டு தரையில் சிதறிக்கிடந்தன.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி நடுத்தெருவில் கிடந்தான் பாட்லா. என்ன காரணத்திற்காக பாட்லாவை கொலை செய்யாமல் விட்டனர் என்று காவல்துறைக்கு புரியவில்லை. போலீஸ் விசாரணையில் மோட்டிவ் கொலைக்கான காரணத்தை சொல்லி பாட்லாவை சிறையில் அடைத்தனர்.
மும்பை கடத்தலின் பிதாமகன் வீழ்ந்த கதை
மும்பையில் அடிக்கடி இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், தங்கம் கடத்தல் உள்பட பல்வேறு சம்பவங்களால் கிரைம் ரேட் அதிகமாகி கொண்டு இருந்து.
இதற்காக பல்வேறு தனிப்படை போட்டு வேலை செய்தது போலீஸ்.
ஆனாலும் கடத்தல், கொலை உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டே இருந்தன. மும்பையின் தாதா கலாசாரத்தை, கடத்தல் தொழிலை யார் கொண்டு வந்தது என்று ‘ரா’ அமைப்பு களத்தில் இறங்கி விசாரிக்க ஆரம்பித்து. அதில் மூத்த முன்னோடியாக கரீம் லாலா என்பவர் வந்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பிழைக்க வந்த குடும்பம் கரீம் லாலாவின் குடும்பம். ஆப்கானிஸ்தானில் இருந்து சில ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தமாக அவர்கள் நாட்டை விட்டு மும்பைக்கு வந்தனர்.
வந்தவர்கள் மும்பையில் மார்கெட், துறைமுகம், உள்பட பல்வேறு இடங்களில் கூலி வேலைகளை செய்துவந்தனர்.
அவர்களைப்போலதான் கரீம் லாலாவின் குடும்பமும் வந்தது. பள்ளிப்படிப்பை தாண்டாத கரீம் லாலா தனது பதினெட்டு வயதில் கள்ளசாராயம் கடத்த ஆரம்பித்தார்.
அதன்பிறகு தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை கடத்தி வந்ததால் செல்வாக்கு உயர்ந்தது. கரீம் லாலாவிடம் மிகவும் சொற்பமான தொகைக்கு வேலை செய்ய நிறைய ஆப்கானிஸ்தான் நபர்கள் வேலைக்கு வந்தனர்.
இருந்தாலும் மும்பையில் நடந்து வரும் நடைமுறை உள்ளூர் அரசியலை சமாளித்து வேலை பார்க்க உள்ளூர் ஆட்கள் தேவைப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு நபர்கள் கரீம் லாலாவிற்கு வேலை செய்ய ஆரம்பித்தனர்.
இது போன்ற ஒரு தருணத்தில் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருந்த இளைஞன் ஹாஜி மஸ்தான் என்பவரை கரீம் லாலாவிற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னாளில் அவர்தான் பாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளாராக வலம் வந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த ஹாஜி மஸ்தான் சில ஆண்டுகள் கழித்து கரீம் லாலாவிடம் இருந்து பிரிந்து வந்து கடத்தல் தொழில் செய்ய ஆரம்பித்தார்.
இருபது வயதில் தொடங்கிய ஹாஜி மஸ்தானின் கடத்தல் பயணம் மும்பையில் யார் ஆட்சியை பிடிப்பது, யார் பாலிவுட்டில் சினிமா ஸ்டாராக நீடிப்பது, கடத்தல் உள்பட பல்வேறு தொழில்களில் அவர்களுக்கு என்று தனியாக தொழில் ஏரியாக்கள் பிரித்து கொடுப்பது உள்பட பல்வேறு டான் வேலைகளை செய்து வந்தார்.
அரசியல்பலமும், சினிமாவும் பலமும் ஒன்றாக இருந்ததால் மும்பையின் அசுர சக்தியாக வளம் வந்தார் ஹாஜி மஸ்தான்.
எப்பொழுதும் வாயில் வெளிநாட்டு சிகரெட், கோட், சூட், தலையில் ஸ்டைலான குல்லா, வெள்ளை நிற பென்ஸ் கார் என்று ஒரு ‘டானு’க்குரிய கனக் கச்சிதமான தோற்றத்தில் வலம் வருவார் ஹாஜி மஸ்தான்.
கரீம் லாவிற்கும் ஹாஜி மஸ்தானுக்கும் இடையில் தொழில் போட்டி இருந்து வந்தது. யார் அதிகாரம் செலுத்துவது என்கிற அதிகார போட்டியில் இவர்கள் அணிகளும் பார்க்கும் இடங்களெல்லாம் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்வார்கள்.
இதனால் பொது மக்களுக்கு பெரும் அளவில் பாதிப்பு இருந்தது. இவர்கள் போடும் சண்டையில் பல அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.
அதோடு இல்லாமல் மார்கெட், துறைமுகம், நடுவீதி என்று எல்லா இடங்களிலும் சண்டை துப்பாக்கி, கொடூர ஆயுதம் உள்பட பல்வேறு பொருட்களால் தாக்கி கொள்வதால் ஆட்களோடு நிறைய பொருட்களும் சேதாரம் ஆனது.
இருவரையும் அடக்க போலீஸ் பல்வேறு யுக்திகளை கையாண்டது. இருவருக்கும் பொதுவான ஆட்களை வைத்து சமாதான பேச்சு வார்த்தையை நடத்தியது.
பலனில்லை அடுத்த இரண்டு நாட்களில் கரீம் லாலாவின் ஆள் ஒருவனை ஹாஜி மஸ்தானின் ஆட்கள் தலையை வெட்டி எடுத்து வந்து கரீம் லாலாவின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு உடலை மாஹி கடல் பகுதியில் தூக்கி போட்டு விட்டு சென்றனர்.
இருவருக்குமான ஹேங் வார் அப்போது உச்சகட்டத்தில் இருந்தது.
மும்பையில் யார் புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் ஹாஜி மஸ்தான், கரீம் லாலாவின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்கிற நிலைமை வந்தது. இதனால் இந்திய அரசு பயங்கரமான நெருக்கடியை சந்தித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த அரசு ஒரு முடிவு எடுத்தது.
அந்த முடிவுதான் இருவருக்கும் ‘தி டான்’ என்கிற பெயரும், அவர்களின் தொழில் உள்பட எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக சரிய காரணமாக இருந்தது.
அது என்ன முடிவு?
– சண். சரவணக்குமார்
இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...