ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பத்து வயது ஜிகாதி ஒருவன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது ரஷ்யாவும் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக தனது தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த 10 வயது ஜிகாதி ஒருவன் அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது
கையில் தனது உயரத்துக்கு ஏவுகணையை வைத்திருக்கும் அந்த சிறுவன், கலிபாவின் கத்தி உங்களை நெருங்கி உங்கள் தலையை கொய்வதற்கு முன்னதாக நீங்கள் எங்களுக்கு மதரீதியான வரியை கட்ட வேண்டும் என்று கூறுகிறான்.
இல்லையென்றால் எங்களது வீரர்கள் உங்கள் தலையை துண்டித்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்கிறான். மேலும் ஜனாதிபதி ஒபாமாவை ரோமின் நாய் ( போப் பிரான்சின் நாய்) என்றும் கூறுகிறான்.
மேலும் உங்கள் வீரர்கள் எங்கள் மண்ணில் புகுந்து அசுத்தப்படுத்தலாம் என்று நினைத்தால், நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்று அர்த்தம் என்றும் தெரிவித்துள்ளான்.
தொடர் தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென ஒபாமாவுக்கு எதிராக வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.