புனே: மனைவியின் கள்ளத்தொடர்பால் ஆத்திரம் அடைந்த கணவன், அவரது தலையை தனியாக துண்டித்து, கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புனேயில் உள்ள கட்ரஜ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாட்ச் மேனாக வேலை பார்ப்பவர் ராமுசாவன் (60). இவரது மனைவி சோனுபாய்(45). மனைவிக்கும் மருமகனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதை பார்த்துள்ளார்.
இதுகுறித்து எச்சரித்தும் மனைவி கண்டுக்ெகாள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமு சாவன், கோடாரியை கொண்டு மனைவியை தலையை துண்டித்து கொலை செய்தார்.
அதன் பின், ஒரு கையில் கோடாரியையும் மற்றொரு கையில் கொத்தாக தலையின் முடியைப் பிடித்து ஆட்டியபடி ரத்தம் சொட்ட, சொட்ட வீதியில் நடந்து சென்றார்.
இந்த கோர காட்சியை பார்த்த சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் பீதியில் திடுக்கிட்டனர். அதற்குள், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ராமு சாவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் : பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி 2 குழந்தைகளை கொன்ற தாய்
சென்னை: பாவாடை நாடாவால் 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தாய், மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர், ‘இரண்டு குழந்தைகளை கொன்ற என்னை தூக்கில் போடுங்கள்’ என போலீசாரிடம் கூறி கதறினார்.
கீழ்ப்பாக்கம், பர்னபி சாலையில் திவ்யதர்ஷன் குடியிருப்பில் ‘பி’ பிளாக்கில் வசிப்பவர் சந்தோஷ் (40). இவர், சரக்கு லாரிகள் மூலம் ஸ்டீல் பொருட்களை கையாளும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி மம்தா (34). இவர்களது குழந்தைகள் யாசி (12), அனுஷ் (7). சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் யாசி 7ம் வகுப்பும், அனுஷ் 2ம் வகுப்பும் படித்தனர்.
தினமும் சந்தோஷ் மது குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி காலை சந்தோஷ் குடித்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
‘நீங்கள் தொடர்ந்து குடித்துவிட்டு வந்தால் 2 குழந்தைகளுடன் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று மம்தா மிரட்டி உள்ளார். இதை சந்தோஷ் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சந்தோஷ் பணிக்கு சென்று விட்டார்.
மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய யாசி அம்மா என்று ஓடி வந்தாள். அப்போது யாசியை படுக்கையறைக்கு அழைத்து சென்ற மம்தா, தனது மனதை கல்லாக்கிக்கொண்டு, அங்கு பாவாடை நாடாவால் அவளது கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.
பின்னர் 4 மணிக்கு வீட்டுக்கு வந்த மகன் அனுஷையும் பாவாடை நாடாவினால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளார்.
பிறகு தனது கணவர் சந்தோஷ் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும் 30 மாத்திரைகளை எடுத்து விழுங்கியதுடன் கத்தியை எடுத்து தனது கையை வெட்டிக்கொண்டார்.
அதன் பின்னர் அக்கா கவுசல்யாவுக்கு போன் செய்து, “குழந்தைகளை பாவாடை நாடாவினால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டேன். நானும் மாத்திரை தின்று விட்டு உயிருக்கு போராடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு பதறிப்போன கவுசல்யா, தனது கணவருக்கு போனில் தகவல் கூறி உள்ளார். கவுசல்யாவின் கணவர், சந்தோஷூக்கு தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் மம்தாவின் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
அங்கு மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த 2 குழந்தைகளையும், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மம்தாவையும் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
2 குழந்தைகளையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மம்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை மம்தாவுக்கு மயக்கம் தெளிந்ததும், எழும்பூர் 2வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன்னிலையில் மரண வாக்குமூலம் அளித்தார்.
அதன் பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து மம்தாவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது கண்ணீருடன் மம்தா கூறியதாவது: எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து திருத்தி விடலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. பல தடவை கோபித்துக்கொண்டு சவுகார்பேட்டையில் உள்ள எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றேன்.
ஆனாலும் அவர் திருந்தவில்லை. கடந்த 7ம் தேதி மதியம் கணவர் குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளையில் ஈடுபட்டார்.
குடிகார கணவருடன் சேர்ந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்தேன். நான் மட்டும் செத்தால் எனது குழந்தைகள் அனாதையாகி மிகவும் கஷ்டப்படும். எனவே, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து 2 குழந்தைகள் வந்ததும் எனது மனதை கல்லாக்கிக்கொண்டு பாவாடை நாடாவால் 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கிக் கொன்றேன். பிறகு குழந்தைகள் இறந்ததை பார்த்து கதறி அழுதேன். 2 குழந்தைகளையும் கொன்ற என்னை தூக்கில் போடுங்கள் எனக் கூறி கண்ணீர் மல்க கதறினார்.
இதன் பிறகு 2 குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை தந்தை சந்தோஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தைகளின் உடலை பார்த்த சந்தோஷ், ‘எனது குடிப்பழக்கத்தால் அருமை குழந்தைகளின் உயிர் போய் விட்டதே’ என கூறி கதறி அழுதார். போலீசார், மம்தா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர்.
Child hung upside down from a tree and beaten….This young boy had got several complaints from his school and of stealing money.
His uncle decided to hang him from a tree upside down and beat him :/