கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்­படும், விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன், ஒரு பய­ணப்­பெட்டி நிறைய விடு­தலைப் புலி­களின் முகாம்கள் அமைந்­துள்ள வரை­ப­டங்­களை எடுத்து வந்­த­தாக பாராளுமன்ற உறுப்­பினர் அலி­சாகிர் மௌலானா தெரி­வித்­துள்ளார்.

2004ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து கரு­ணாவை காப்­பாற்றி, கொழும்­புக்குப் பாது­காப்­பாக அழைத்துச் சென்­றி­ருந்த அலி சாகிர் மௌலானா, அது­பற்­றிய தக­வல்­களை கொழும்பு ஆங்­கில வார­இதழ் ஒன்­றுக்கு வெளி­யிட்­டுள்ளார்.

‘கரு­ணாவின் செயற்­பா­டு­களில் மாற்­றத்தை அவ­தா­னித்த போது, அது­பற்றித் நான் பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கூறினேன்.
அதற்கு அவர், அவ­ருக்­காக கத­வுகள் திறக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பதி­ல­ளித்தார்.

இந்த விவ­காரம் குறித்து, கரு ஜெய­சூ­ரிய, திலக் மாரப்­பன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஒஸ்ரின் பெர்­னாண்டோ ஆகி­யோ­ரிடம் கலந்­து­ரை­யா­டினேன்.கவ­ன­மாக கையா­ளு­மாறு அவர்கள் கேட்டுக் கொண்­டனர்.

ஒஸ்­லோவில் நடந்த பேச்­சுக்­களின் பின்னர் வன்னி திரும்­பிய கருணா, அங்­கி­ருந்து மட்­டக்­க­ளப்­புக்குத் திரும்ப உலங்­கு­வா­னூர்தி ஒன்றை ஒழுங்கு செய்து தரு­மாறு பாது­காப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்­னாண்­டோ­விடம் தகவல் பரி­மா­று­மாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் பாது­காப்புச் செயலர் ஒஸ்ரின் பெர்­னாண்­டோ­வுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவர், மட்­டக்­க­ளப்பு திரும்­பி­யதும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் தொடர்பு எதையும் வைத்துக் கொள்­ள­வில்லை.பின்னர், வெரு­கலில் இருந்து வந்து கடற்­பு­லிகள் தாக்­குதல் தொடுத்­துள்­ள­தா­கவும், தமது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் கருணா கூறினார்.

நான் அதைப் புரிந்து கொண்டேன். போர் நிறுத்தக் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுக்கு அது­பற்றி அறி­வித்தேன்.

கரு­ணாவை கொழும்­புக்கு அழைத்துச் செல்ல ஒழுங்கு செய்தேன். அது ஆபத்­தா­னது. அப்­போது ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. நாம் அதி­கா­ரத்தில் இருக்­க­வில்லை. எனினும் நாட்­டுக்­காக நான் அந்த ஆபத்­தான காரி­யத்தை மேற்­கொண்டேன்.

கரு­ணா­வையும் அவ­ரது குழு­வி­ன­ரையும் எனது வாக­னத்தில் ஏற்­றினேன். எனது பாது­கா­வ­லர்கள் அவரைச் சோத­னை­யிட்­டனர். அவர் ஆயுதம் தரித்­தி­ருக்­க­வில்லை. ஒரு பயணப் பெட்­டியை மட்டும் வைத்­தி­ருந்தார். அதை திறந்து காட்­டினார்.

அதில் முழு­வதும், விடு­தலைப் புலி­களின் முகாம்கள் பற்­றிய வரை­ப­டங்கள் தான் இருந்தன.

கருணாவுடன் ஐந்து பேர் வந்தனர். தம்புள்ளவில் நாங்கள், இராப்போசனம் அருந்தினோம்.

நான் அவரை பாதுகாப்பாக ஜெய்க்ஹில்டன் வரை அழைத்துச் சென்று விட்டேன்.” என்றும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply