அது கடந்த 5 ஆம் திகதி காலை­நேரம். கடி­கா­ரத்தில் நேரமோ 6.05 என காட்டிக் கொண்­டி­ருந்­தது. பொரளை பொலிஸ் நிலை­யத்­துக்கு பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வான 119 ஊடாக அப்­போது தான் ஒரு தகவல் பரிமாறப்­ப­டு­கி­றது.

“சேர்…… நாங்கள் கோல்ப் மைதா­னத்­துக்கு அரு­கி­லி­ருந்து கதைக்­கின்றோம்…… இங்கு ஒரு­வரை வெட்டி போட்டிருக்­கி­றார்கள்….” என அழைப்பை ஏற்­ப­டுத்­திய நபர் தகவல் தெரி­வித்து அழைப்பை துண்­டித்தார்.

இத­னை­ய­டுத்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு உட­ன­டி­யாக பொரளை கித்­துல்­வத்த வீதியில் உள்ள கோல்ப் மைதானம் பகு­திக்கு விரைந்து சென்­றது.

இதன்­போது அந்த மைதா­னத்தின் பிர­தான வாயி­லுக்கு அருகே நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளதை பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

பொரளை பொலிஸ் பிரிவின் கித்­துல்­வத்த வீதியில் உள்ள இந்த கோல்ப் விளை­யாட்டு மைதானம் மிக பிரபல்ய­மா­னது.

அத்­துடன் கோல்ப் விளை­யாட்டில் ஈடு­படும் பல உள்­நாட்டு, வெளி­நாட்டு செல்­வந்­தர்கள் வந்து செல்லும் இடமும் கூட. அதனால் அந்த மைதானப் பகு­தியை முக்­கி­ய­மான பல அதி­திகள் வந்து செல்லும் பகு­தி­யாக கூட அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

இந்­நி­லையில் உடன் செயற்­பட்ட பொரளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சம்­பவம் தொடர்பில் தனது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்தார்.

மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட,  ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய கொழும்பு தெற்­கிற்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பணா­மல்­தெ­னி­யவின் கட்­டுப்­பாட்டில் விசார­ணைகள் ஆரம்­ப­மா­கின.

சம்­ப­வஸ்­த­ல­மா­ன கோல்ப் மைதானப் பகு­திக்கு சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பணாமல் தெனிய அங்­கி­ருந்த பொரளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­ட­வர்­க­ளிடம் ஸ்தல விசா­ர­ணைகள் தொடர்­பி­லான தக­வல்­களை பெற்றுக் கொண்டார்.

அதன்­படி கோல்ப் மைதான வாயலில் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தவர் அதே பகு­தியைச் சேர்ந்த அந்த மைதா­னத்தின் தொழி­லா­ள­ரான சமிந்த பெரேரா எனவும் அவர் 38 வய­தா­னவர் எனவும் திரு­ம­ண­மாகி மனை­வியை பிரிந்து வாழும் அவர் தனி­யா­கவே வீட்டில் வாழ்ந்து வரு­வது குறித்தும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்­சகர் பாலித்த பணாமல் தெனி­ய­வுக்கு தகவல் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் கொழும்பு தெற்கு பிரிவு III இற்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான்டயஸ்ஸிடம் விசா­ர­ணை­களை ஒப்­ப­டைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பணாமல் தெனிய பொரளை பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக நார­ஹேன்­பிட்டி, வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரி­வு­க­ளையும் விசா­ரணை நட­வ­டிக்­கையில் இணைத்துக் கொள்ள ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அதன்­படி வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­முல்ல, நார­ஹேன்­பிட்­டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் திஸ்ஸ சுகத்­த­பால ஆகி­யோரை அழைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பணாமல் தெனிய உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான் டயஸின் ஆலோ­ச­னையின் கீழ் செயற்­பட அறி­வுறுத்­தல்­களை வழங்கியுள்ளார்.

இந்­நி­லையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான் டயஸ் பொரளை, நார­ஹேன்­பிட்டி மற்றும்வெள்ளவத்தை பொலிஸ் நிலைய விசா­ரணை குழுக்­க­ளுக்கு விசா­ர­ணையின் முக்­கிய 3 பகு­தி­களை பாரப்­ப­டுத்­தினர்.

.

இந்­நி­லையில் அடிப்­படை விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொரளை பொலிஸார் கொலை செய்­யப்­பட்ட சமிந்த பெரே­ராவின் பெற்றோர் சகோ­த­ரரை வர­வ­ழைத்து சட­லத்தை அடை­யாளம் கண்­டனர்.

அத்­துடன் புதுக்­கடை 2 ஆம் இலக்க நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பித்து பிரேத பரி­சோ­த­னைக்கும் சட­லத்தை உட்­ப­டுத்­தினர்.

ஆழ­மான வெட்­டுக்­கா­யங்­களால் அதிக இரத்தம் வெளி­யே­றி­யமை மர­ணத்­துக்­கான காரணம் என பிரேத பரி­சோ­த­னையில் தெரி­ய­வந்­தது.

இத­னை­விட சமிந்த பெரேரா பெடிஸ் என்ற பெய­ரா­லேயே பெரிதும் அழைக்­கப்­பட்டு வந்­துள்­ள­தையும் கோல்ப் மைதா­னத்தில் பந்து சேக­ரித்து கொடுக்கும் வேலையில் கடந்த 20 வரு­ட­மாக அவர் ஈடு­பட்­டு­வ­ரு­வதும் பொரளை பொலி­ஸாரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தது.

இவ்­வாறு தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட போது வெள்­ள­வத்தை குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நாக­ஹ­முல்ல தனது பொறுப்பை மறு­புறம் நிறை­வேற்­ற­லானார்.

கோல்ப் மைதா­னத்தின் ஏனைய ஊழி­யர்கள் மைதா­னத்தை அண்­டிய பகு­தியை உடையோர் என ஏரா­ள­மா­னோரின் வாக்கு மூலங்­களை நாகஹ முல்ல தலை­மை­யி­லான பொலிஸ் குழு சேக­ரித்­தது.

அந்த வாக்கு மூலங்­களில் கோல்ப் மைதான ஊழி­யர்கள் பலர் வழங்­கிய வாக்கு மூலங்கள் மிக முக்கியமானவை.

அதா­வது பெடிஸ் என்ற சமிந்த பெரேரா கழுத்தில் தங்­கச்­சங்­கிலி, விரலில் தங்க மோதிரம் ஆகி­ய­வற்றை எப்போதும் அணிந்தே காணப்­ப­டு­வ­தா­கவும் உயர்­ரக தெலை­பே­சி­யையே அவர் பயன்­ப­டுத்­தி­ய­தா­கவும் நாள் ஒன்­றுக்கு 1500 ரூபா­வுக்கு மேல் சம்­பா­திப்­ப­தா­கவும் கோல்ப் மைதா­னத்­துக்கு வரும் கோல்ப் விளை­யாட்டு பிரியர்­களால் பெரு­ம­ளவு ‘டிப்ஸ்’ பணமும் கிடைப்­ப­தா­கவும் அந்த வாக்கு மூலங்கள் உறு­திப்­ப­டுத்­தின.

மறு புறம் தொழில்­நுட்ப ரீதி­யி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நார­ஹேன்­பிட்டி பொலிஸார் குற்றம் இடம் பெற்ற கோல்ப் மைதா­னத்தின் பிர­தான வாயி­லுக்கு அருகே உள்ள பகு­தியை சல்­லடை போட்டு ஆய்வு செய்­தனர்.

இதன் போது சடலம் காணப்­பட்ட பகு­திக்கு அருகே பாதையின் சிறிய தூரத்தில் இருந்த மரம் ஒன்­றுக்கு கீழ் மிளகாய்த் தூள் சொப்பிங் பை ஒன்று அவர்­களால் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

அந்த மிளகாய்த் தூள் பையா­னது அள்ளி எடுப்­ப­தற்கு ஏது­வான வகையில் மேற்­ப­குதி சுருட்­டப்­பட்ட நிலையில் இருந்­தது.

அத­னை­விட கைகளால் அதி­லி­ருந்து பெரு­ம­ளவு மிளகாய் தூளினை அள்­ளி­ய­தற்­கான அடை­யா­ளமும் வீழ்ந்து கிடந்த அந்த மிளகாய்த் தூள் பையில் காணப்­பட்­டது.

இத­னை­விட கிடைக்­கப்­பெற்ற மிளகாய்த் தூள் பைக்கு மேல­தி­க­மாக, சிறிது தூரத்தில் முன்­னொன்றும் பின்னொன்­று­மாக இருந்த ஒரு சோடி செருப்­பி­னையும் நாரஹேன் பிட்டி பொலிஸார் கண்­டனர். அவை சட­லத்தை நோக்­கி­ய­தாக இருப்­ப­தையும் அவர்கள் அவ­தா­னித்தனர்.

இந்­நி­லையில் இந்த தக­வல்கள் அனைத்தும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரொஷான் டய­ஸுக்கு தெரியப்படுத்­தப்­பட்­டன.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பணாமல் தெனி­யவும் ஆலோ­ச­னை­களை வழங்க ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தக­வல்கள் ஊடாக விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

அதன்­படி பொரளை பொலி­ஸாரின் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்த தக­வல்கள் வெள்­ள­வத்தை, நாரஹேன்­பிட்டி பொலி­ஸாரின் விசா­ரணைத் தக­வல்­க­ளுடன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டன.

அதன்­படி வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு பலர் வழங்­கிய வாக்கு மூலங்­களில் சமிந்த பெரேரா அணியும் தங்க ஆப­ர­ணங்கள், பயன்­ப­டுத்தும் விலை­ம­திப்பு மிக்க கைய­டக்கத் தொலை­பேசி தொடர்­பி­லான தக­வல்­க­ளுக்கு பதில் இருக்­க­வில்லை.

அதாவது பொரளை பொலிஸாரின் விசாரணை அறிக்கையில் சடலத்தில் தங்க ஆபரணங்களோ அருகே கையடக்கத் தொலைபேசியோ இருந்ததாக இல்லை.

எனவே பொரளை, வெள்ளவத்தை பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளை வைத்து இது தங்க நகைகளை கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு பொலிஸார் வந்தனர்.

அத்துடன் பிரேத பரிசோதனையில், சமிந்த பெரேராவின் கண்களில் மிளகாய்பொடி இருந்ததை வைத்தும் நாரஹேன்பிட்டி பொலிஸாரின் விசாரணையில் தடயமாக மிளகாய் பொடி பை கிடைத்ததை வைத்தும், செருப்பு உள்ளிட்ட தடயங்களை வைத்தும் கொலையானது மிளகாய் பொடி வீசப்பட்டதன் பின்னர் விரட்டிச் செல்லப்பட்டு புரியப்பட்டது என்ற அனுமானத்தையும் பொலிஸார் பெற்றனர்.

இந் நிலையில் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அறிவியல் தடயங்களை மையப்படுத்திய விசாரணைகளை முன்னெடுத்த நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ, பெண் உப பொலிஸ் பரிசோதகர் சந்துனி கான்ஸ்டபிள்களான கமல், விஜேவீர, சாமர, ஜயசிங்க உள்ளிட்ட குழுவினரின் அவதானம் சமிந்த பெரேராவின் நவீன ரக கையடக்கத் தொலைபேசி மேல் சென்றது.

ஏனெனில் அதற்கு காரணம் இருந்தது. சமிந்தவைக் கொன்றவர் கண்டிப்பாக கையடக்கத் தொலைபேசி, தங்கச் சங்கிலி மற்றும் தங்க மோதிரத்தைக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என பொரளை, வெள்ளவத்தை பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வெவ்வேறு கோண விசாரணைகளில் உறுதியானதே அதற்கான காரணமாகும்.

இந் நிலையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், சமிந்தவின் தொலைபேசி இலக்கத்தை அவனது நண்பர்கள் ஊடாக பெற்றுக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதன்படி சமிந்தவின் இலக்கத்துக்கு இறுதியாக ஒரு இலக்கத்திலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதை பொலிஸாரால் அவதானிக்க முடிந்தது.

இந் நிலையில் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு சொந்தக்காரர் யார் என்பதை அறிய விசாரணை நடத்திய பொலிஸார், அவர் பொரளை , கித்துல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த அருணு சாந்த என்பவரென்று தெளிவானது.

இதனையடுத்து கித்துல்வத்தை அருணு சாந்தவை தேடி அவரது வீட்டுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸார் சென்றனர்.

எனினும் அருணு சாந்தவை அங்கு பொலிஸாரினால் காணமுடியவில்லை. வீட்டில் அவன் மனைவி சாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்த நிலையில் அருணு சாந்த எங்கே என அவன் மனைவியை பொலிஸார் விசாரணை செய்தனர்.

‘ சேர்… அவர் வேலை விஷயமாக பதுளை வரை போயிருக்கின்றார். ஒரு விண்ணப்பம்… அதனை கொடுத்துவிட்டு வருவதாகவே சென்றார். காலையில் வந்துவிடுவார்.’ என சாலினி பொலிஸாருக்கு பதிலளித்துள்ளார்.

அருணு சாந்தவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் கூடவே சமிந்த கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்து தடயமாக மீட்கப்பட்ட செருப்பு ஜோடியின் ஒன்றை கூடவே எடுத்துச் சென்றிருந்தனர். அந்த செருப்பின் பட்டியில் ‘ ஸ்போர்ட்ஸ்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந் நிலையில் அந்த செருப்பை காட்டிய பொலிஸார் சாலினியிடம் இந்த செருப்பை அடையாளம் தெரிகின்றதா என கேட்டனர்.

‘ சேர்…இது கணவரின் செருப்பு.. இரவில் நான்கூட திடீரென விழித்திருக்கும் போது இதனை மலசல கூடத்துக்கு போட்டு செல்வேன்..

ஏனெனில் அவர் கட்டிலுக்கு அருகிலேயே கழற்றி வைத்துவிட்டு செல்வார்.. அம்மாம்.. இந்த செருப்பு உங்களுக்கு எப்படி சேர்…என் கணவருக்கு என்ன ஆனது…’ சாலினி எதுவும் தெரியாமல் அப்பாவித்தனமாக பொலிஸாரிடம் கேட்டாள்.

பொலிஸாரின் சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியானது. விசேட பொலிஸ் குழு இரவோடிரவாக பதுளை நோக்கி சென்றது.

அப்போது அதிகாலை 5 மணியை எட்டியிருந்தது. அருணு சாந்த பதுளை பஸ் நிலையத்துக்கு வந்தார். அதுவரை பஸ் நிலையத்தில் காத்திருந்த பொலிஸார் சமிந்த பெரேராவின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் அவனைக் கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்தனர்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அவனை விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது தான் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாது அருணுசாந்த கிளிப் பிள்ளையாய் ஒப்புவித்தான்.

‘ சேர்..உண்மையை சொல்கின்றேன்.. அந்த கொலையை நான் தான் செய்தேன்.. தங்கச் சங்கிலி, மோதிரத்தை அபகரிக்கவே செய்தேன் சேர்… அவற்றை நாரஹேன்பிட்டி பகுதியில் அடகுக்கடையில் அடகுவைத்துள்ளேன்..சேர்..’ எனக் கூறியவன் கொலை செய்த விதத்தையும் அப்படியே குறிப்பிடலானான்.

‘ அன்றைய தினம் மாலை 5 மணி இருக்கும் சேர்.. நான் கோல்ப் மைதானத்துக்கு அப்பால் உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில் நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது பெட்டிஸ் வேலை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தான். வரும் போது என்னிடம் ‘ இன்று எதுவும் செய்யவில்லையா தம்பி’ என கேட்டான். அந் நேரத்தில் நானும் நண்பர்கள் சிலரும் அங்கு பியர் குடித்துக்கொண்டும் கஞ்சா பயன்படுத்திக் கொண்டும் இருந்தோம். நான் ஏதாவது செய்வோம் என பெட்டிசுக்கு பதிலளித்தேன்.

இரவாகும் போது நான் வீட்டுக்கு சென்றேன். கோல்ப் மைதானத்துக்கு அடிக்கப்பட்டிருக்கும் வலையை ஓரமாக்கிவிட்டு அப்பால் சென்றால் எனது வீட்டு சுவர் உள்ளது.

மெதுவாக வீட்டுக்குள் சென்ற நான் அணிந்திருந்த காற்சட்டையை மாற்றிவிட்டு நீல நிற காற்சட்டை ஒன்றை அணிந்தேன். ஏற்கனவே கொள்வனவு செய்த கத்தியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டேன்.

வீட்டில் கொள்வனவு செய்து வைக்கப்பட்டிருந்த மிளகாய் பொடியையும் சொப்பிங் பையுடனேயே கையில் எடுத்துக்கொண்டேன். அப்படியே கோல்ப் மைதானத்தின் பிரதான வாயிலை நோக்கி நான் சென்றுகொண்டிருந்த போது பெட்டிக்கு நான் அழைப்பை ஏற்படுத்தினேன்.

அழைப்பை ஏற்படுத்தி.. இன்று ஏதாவது செய்வோமா என நான் கேட்டேன். பியர் ஒன்று எடுப்போமா… வருகின்றாயா என கேட்கும் போதே எனது தொலைபேசியின் பெட்டரி விலகி அது செயலிழந்தது. பின்னர் மீண்டும் பெட்டரியை சரிசெய்து அழைப்பை ஏற்படுத்தினேன்.

பெடிஸ் அண்ணா… சிகரட் பெக்கட் ஒன்றும் எடுத்துக்கொண்டு கோல்ப் மைதானத்தின் பிரதான வாயில் பக்கமாக வாருங்கள் என்றேன்.

பெட்டிஸ் துவிச்சக்கர வண்டியில் வந்தான். வந்து துவிச்சக்கர வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு எனக்கு அழைப்பை ஏற்படுத்தி எங்கே இருக்கின்றாய் என கேட்டான்.

அப்போது நான் மைதானத்துக்கு உள்ளே மரம் ஒன்றின் கீழ் இருந்தேன். நீ நிற்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.. அப்படியே முன்னோக்கி வா என நான் பெட்டிஸ் இடம் கூறினேன்.

அவனும் அப்படியே வந்தான். வரும் போது மறைந்திருந்த நான் அவன் முகம் மீது மிளகாய் பொடியை வீசினேன்.. அவன் மீண்டும் திரும்பி ஓட ஆரம்பித்தான்.

விரட்டினேன். விரட்டிச் சென்று கத்தியால் பின் புறமாக வெட்டினேன்… அது அவனது கையை பதம் பார்த்தது. தொடர்ந்தும் ஓடினான்.. விடவில்லை.. விரட்டினேன்.. ஒரு இடத்தில் முகம் குப்புற அவன் விழுந்தான்.

உடனே நான் அவனது தலையை பதம் பார்த்து இரு வெட்டுக்களை வெட்டினேன்.. அவன் அவ்விடத்திலேயே இறந்தான்…

உடனே பெட்டிஸ் அணிந்திருந்த தங்க மாலை, மோதிரம் என்பவற்றுடன் இரு தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு கத்தியையும் புல்லில் துடைத்துக் கொண்டு வீதிக்கு சென்றேன்.

அங்கு முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி நேராக வீட்டுக்கு வந்தேன். வீட்டின் முன்னால் உள்ள குழாய் நீர் பைப்பில் உடைகளை கழுவினேன். கத்தியை கூரையின் மேல் மறைத்தேன்.

உடைமாற்றிக்கொண்டு கொள்ளையிட்ட நகையுடன் அதே முச்சக்கர வண்டியில் நாரஹேன்பிட்டிக்கு சென்றேன். அங்கு மோதிரத்தை அடகு வைத்தேன். 28 ஆயிரம் ரூபா கிடைத்தது.

முச்சக்கர வண்டிக்கு வாடகையாக 700 ரூபா கொடுத்தேன். பியர் ஒன்றை மீண்டும் வாங்கினேன். நண்பர்களுடன் சேர்ந்து குடித்தேன். பின்னர் வீட்டுக்கு இரவு 10 மணி அளவில் வந்தேன். வரும் போது மனைவிக்கு கொத்து வாங்கிக்கொண்டு போனேன்.

காலையில் எழுந்து பெட்டிஸை கொலை செய்த இடத்துக்கு போனேன். அங்கு எனது செருப்பு இருந்தது. அப்போது எனக்கு பயமாக இருந்தது. நேராக வீட்டுக்கு வந்தேன்.

பெட்டிஸின் சங்கிலியை கொண்டு போய் அடகு வைத்தேன். வைத்துவிட்டு 27000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டேன். எனது மூத்த பிள்ளை பொரளையில் படிக்கும் நிலையில் அந்த பிள்ளைக்கு விளையாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு பாடசாலை விட்டதும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றேன்.

பெடிஸின் தொலைபேசியை சப்பாத்துக்குள் ஒளித்து வைத்தேன். பின்னர் இரவு வேலை விஷயமாக எனக் கூறி பதுளைக்கு வந்தேன்.

புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து இரவோடிரவாக பதுளைக்கு வந்தேன். அதற்கு மறு நாள் மீண்டும் கொழும்புக்கு வர பதுளை பஸ் நிலையத்துக்கு வந்த போதே நீங்கள் கைதுசெய்து விட்டீர்கள் என அவன் ஒன்று விடாது அத்தனையையும் பொலிஸாரிடம் கூறினான்.

கைது செய்யப்பட்ட அருணு சாந்தவின் அடையாளப்படுத்தலின் பிரகாரம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், தொலைபேசி மற்றும் கொலையின் போது அணிந்திருந்த ஆடை என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன.

சமிந்த பெரேரா அழகாக அணியும் உடைகள், நகை ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டு அவற்றை எப்படியேனும் அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் மிக சூட்சுமமாக செய்யப்பட்டதே இந்த கொலை என பொலிஸார் விசாரணைகளில் வெளிப்படுத்திக்கொண்டதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கூட கொலை செய்வதற்கென்றே கொள்வனவு செய்யப்பட்டது என்பதையும் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட அருணு சாந்த புதுக்கடை இரண்டாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

Share.
Leave A Reply