சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் எதிரெதிராக மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18-1445146947-kamal-gauthami45
நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்களித்தபின் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

அதன்படி, நடிகர் கமல், நடிகை கவுதமியுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது அவர், “பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பியது நடிகர் சங்கம். தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும்.

இந்தத் தேர்தலுக்குப் பின் மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றார். முன்னதாக காலையில் தனது வாக்கினைப் பதிவு செய்த ரஜினி,  ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கமல்ஹாசனோ இந்திய நடிகர் சங்கம் என்று கூறியிருப்பது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்திய நடிகர் சங்கமாக மாற்றவேண்டுமாம் என்கிறார் கமலஹாசன். (இவர் ஒரு தமிழரா??) கமல்ஹாசன் “உலகநாயகன்”  என அழைக்கப்படுவதால் …. தென்னிந்திய நடிகர் சங்கத்தை  “உலக நடிகர்சங்கம்” என பெயர் மாற்றி வைக்கலாமே??

Share.
Leave A Reply