கொண்டயா இன்று கம்பஹா நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் அவரை பொறுப்பேற்பதற்கு அவரின் குடும்பத்தார் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறுமி சேயாவின் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த இவர் கடந்த திங்கட் கிழமை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் வேறு இரண்டு வழக்குகளுக்காக நேற்றும் இன்றும் அவர் வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்படி நேற்று இவர் அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அந்த நீதிமன்றத்தினால் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் வேறு வழக்கொன்றிற்காக கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் இன்றைய தினம் அவருக்கு வீட்டுக்கு செல்ல முடியும் என்றபோதும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் அவரின் தாயும் சகோதரியும் அவரை பொறுப்பேற்க முன் வரவில்லை.

இதனால் இவரை மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply