2005 இல் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு 4 மாதங்களுக்கு பின் ஜனாதிபதி தேர்தலில் வடபகுதி மக்கள் வாக்களிக் காமல் இருக்க புலித்தேவனினூடாக பணம் வழங்கியதற்கும் தொடர்பு இருக்கிறதா என ஆராய வேண்டும். அவ்வாறு கிடையாது என யாரும் மறுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பண கொடுக்கல் வாங்கல் (டீல்) மேற்கொண்ட புலித்தேவனை காப்பாற்றும் முயற்சி 2005 இல் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு இவரே பொறுப்புக்கூற வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் புலித்தேவன்
இல்லாவிட்டால் இவர்களுக்கு ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். ஜெனீவா பிரேரணை தொடர்பான விவாதத்தில் கருத்துத் தெரிவித்த அவர், 2005 ஆகஸ்ட் மாதத்தில் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளினால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை நடைபெற்று 4 மாதம் செய்வதற்கு முன்னர் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு வாக்காளர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்காகவே இவ்வாறு பணம் வழங்கப்பட்டே ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டப் பட்டது. கொலைக்கும் இதற்குமிடையில் தொடர்பு இருக்கிறதா? இல்லை என்று மறுக்க முடியாது. புலிகள் கொன்றதை நாம் அறிவோம்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அனைவரும் அலரி மாளிகையில் கூடினார்கள்.
அவருகளுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்த உண்மைகள், உண்மை அறியும் ஆணைக்குழுவில் வெளியாகும் என்று பயமா? பயமில்லாவிட்டால் அது குறித்து விசாரிப்போம்.
இந்த கொடுக்கல் வாங்கலின் பின்னர் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவிலாறுவை ஏன் பிடித்தார்கள் இதிலிருந்து தப்ப முடியும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அரசாங்கத்திற்குள் சிக்கல் தலை தூக்கியது. ஒரு பக்கம் ஹெலஉருமய எம்.பிகளும் மேலும் சில எம்.பிகளும், இராணுவமும் இதனை எதிர்த்தனர்.
ரத்ன தேரர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார். எதிர்பாராத விதத்திலே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் உண்மை.
பெப்ரவரியில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் புலிகள், 3 இலட்சம் மக்களை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அவர்கள் மக்களை பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றிருக்காவிட்டால் இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்திருக்காது. மறுபக்கம் மார்ச் மாதமாகும் போது பொதுத் தேர்தலில் ப.ஜ.க. வெற்றியீட்டி ஜெயலலிதா அரசாங்கத்துடன் இணையும் என அவர்கள் கருதினார்கள்.
அதனால் தேர்தலுக்கு முன் இதனை துரிதமாக முடிவு கட்டுமாறு இங்கிருந்து உத்தரவு வழங்கப்பட்டது. அதன் பிகாரம் இராணுவம் செயற்பட்டது.
புலிகள் வெள்ளைக் கொடியுடன் வருகையில் அது தொடர்பில் கட்டளையிடும் அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும். ஆனால் கொழும் பிலிருந்தே உத்தரவு வழங்கப்பட்டது.
ஏன் அவ்வாறு நடந்தது. கொடுக்கல் வாங்கல் (டீல்) மேற்கொண்ட புலித்தேவனை 2005 நவம்பர் மாதத்தில் காப்பாற்றும் தேவையிருந்தது.
புலித்தேவனை காப்பாற்றுவதற்கு யார் பணம் கொடுத்தார்கள்? ஜனாதிபதித் தேர்தலின் போது டீல் மேற்கொண்டது யார்? அது குறித்து அறிந்தவர்கள் இங்கிருக்கிறார்கள் த.தே.கூ.ற்கும் இது தெரியும்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கு புலித்தேவன் பொறுப்புக்கூற வேண்டும். புலித்தேவன் இல்லாவிட்டால் இவர்களுக்கு ஆட்சிக்கு வர முடிந்திருக்காது.
அவரை காப்பாற்ற முயன்றதாலே தேவையற்ற பிரச்சினை ஏற்பட்டது. வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் உண்மையில் சரணடைய வந்தனரா அல்லது பொய்யாக வந்தனரா? என முடிவு செய்வது இராணுவத்தின் பணியாகும். இறுதியில் எமது இராணுவம் நட்டாற்றில் விடப்பட்டது என்றார்.