புங்குடுதீவு மாணவியின் பாலியல் பலாத்கார கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபருக்கு திருட்டுச் சம்பவம் ஒன்றில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதற்கமைய அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் தீர்ப்பளித்துள்ளார்.

அம்பிகாபதி என்பவரின் புங்குடுதீவிலுள்ள வீட்டினை வித்தியாவின் தாயாரான சரஸ்வதி பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த2014ஆம் ஆண்டு குற்றவாளியான தவக்குமார் என்பவர் அம்பிகாபதி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இருந்து 3 கதிரைகளையும் 2 மெத்தைகளையும் திருடியுள்ளார்.

சம்பவதினம் சரஸ்வதி குறித்த வீட்டினை சென்று பார்த்தபோது அவ்வீட்டின் கதவு திறந்தே இருந்துள்ளது. எனவே இச் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையில் வீட்டின் உரிமையாளரால் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை அப்பகுதியில் உள்ள வேறு ஓரு வீட்டில் இருந்து மீட்டுள்ளனர். அத்துடன் அவ்வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளானர்.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னிடம் பொருட்களை விற்பனை செய்தவரை அவர் இனங்காட்டியுள்ளார்.

இதன்படி சந்தேக நபரான பூவாலசிங்கம் தவக்குமார் என்பவரை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முறப்படுத்தியிருந்தனர்.

 

பொலிஸாரின் விசாரணையில் இருந்து குறித்த பொருட்கள் வேறொருவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன் குறித்த பொருள் மீட்கப்பட்ட நபருடனான விசாரணயில் குறித்த சந்தேக நபரே தமக்கு அதனை விற்றதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த நபரது சாட்சியத்தின் அடிப்படையிலும் பொருட்களை வீட்டின் உரிமையாளர் தம்முடையது என்பதை நிரூபித்திருந்தமையும் அப்பொருட்களை விசேடமாக தமக்காக தயாரித்திருந்தமை போன்ற விசாரணைகளின் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரான தவக்குமார் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் அவருக்கு நீதிவான் 3 ½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக வித்தியாவின் தாயான சரஸ்வதி சிவலோகநாதன் சாட்சியமளித்ததன் காரணமாக அவரை பழிவாங்கும் முகமாக வித்தியாவைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாகவும் பரவலாக எல்லோராலும் பேசப்பட்டிருந்ததோடு வித்தியாவின் படுகொலை தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்தியாவின் கடைசிப் பயணம்

Share.
Leave A Reply