இங்கிலாந்தின் டிவோன் பகுதியைச் சேர்ந்த முதியோர் வசிக்கும் காப்பகம் ஒன்றில், ஆண் மற்றும் பெண் என்ற பாகுபாடின்றி வயதானோரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இங்குள்ள டேவான் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த கிறிஸ்டினா சேத்தி(25), மனநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களைத் தேர்ந்தெடுத்து தான் விரும்பிய விதமாக அவர்களைத் துன்புறுத்தியுள்ளார்.

101 வயது மூதாட்டியையும் சேர்த்து மூன்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி அதை வீடியோவாகவும் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரையும் இழந்துள்ளார்.

விசித்திரமான சேட்டைகளில் நாட்டம் கொண்டிருந்த கிறிஸ்டினா தனது லேப்டாப்பை பழுது பார்ப்பதற்காக ஒருவரிடம் கொடுத்திருந்தார்.

அதில், சேமித்து, பின்னர் அழிக்கப்பட்ட வீடியோ பதிவுகளைக் கண்ட அந்த நபர் மேற்கண்ட காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துபோனார்.

இவ்வளவு வயதானோரிடம் கிறிஸ்டினா பாலியல் தொந்தரவு செய்வதை சகித்துக் கொள்ள முடியாத அவர் உடனடியாக போலீசாருக்கு இதுபற்றி தகவல் அளித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவுகளை தனது காதலருடனும் கிறிஸ்டானா பகிர்ந்து கொண்டதாக தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிறிஸ்டினாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஆகஸ்ட் தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனை போதாது. தன்னை நம்பி தங்களது வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்திருந்தவர்களுக்கு செய்த துரோகத்துக்காக குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஹால்லெட், கிறிஸ்டினாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

Share.
Leave A Reply