சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், செல்லிடத் தொலைபேசி பழுது பார்க்கும் தொழிலை ஆரம்பித்து, 48,000 இற்கும் அதிகமான தொலைபேசிகளை பழுதுபார்த்துள்ளார்.
மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரேபியாவில் செல்லிடத் தொலைபேசி திருத்துனராக பணியாற்றும் முதலாவது பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலைபேசி பழுதுபார்க்கும் நிலையம் அமைந்துள்ளது.
இவர் பெண்களுக்கு மாத்திரமே இச்சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினமும் 90 முதல் 120 வரையிலான தொலைபேசிகள் பழுதுபார்க்கப்படுவதற்காக தனக்கு வழங்கப்படுவதாக மரியம் அல் சுபேய் தெரிவித்துள்ளார்.
“9 வருடங்களுக்கு முன்னர் செல்லிடத் தொலைபேசிகளை பழுதுபார்க்க ஆரம்பித்தேன். சுயமாகவே இது குறித்து நான் கற்றுக்கொண்டேன்.
பின்னர் ஏனைய பெண்களுக்கு உதவுவதற்காக தொலைபேசி பழுதுபார்க்கும் சேவையை ஆரம்பித்தேன்.
இப்போது , எனது நிலையத்துக்கு சகல வகையான செல்லிடத் தொலைபேசிகளுடன் மடிக்கணினிகளும் பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்படுகின்றன.
எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளதுடன், பெண்களான எனது வாடிக்கையாளர்களும் உதவிகரமாக உள்ளனர்” என மரியம் அல் சுபேய் தெரிவித்துள்ளார்.
Saudi woman repairs 48,000 mobile phones
29-10-2015
Mariam Al Subaei provides mobile phone repair and maintenance services only for women. (Sabq)
A Saudi woman says she had repaired nearly 48,000 mobile phones in just one year following the launching of maintenance services as the first women-only phone repair centre in the conservative oil-rich Gulf Kingdom.
Mariam Al Subaei said she provides mobile phone repair and maintenance services at her centre in the capital Riyadh only for women and that she receives between 90 and 120 handsets for servicing every day.
“I began personally nine years ago and trained myself on such services.
“I wanted to help our women and prevent the others from blackmailing them.
“I now have a centre for servicing all types of mobiles and laptops,” she told ‘Sabq’ newspaper.
“My family encouraged and supported me and all my female customers were very helpful and encouraging. That is why I expanded and succeeded in this career.”
She said her centre, which is manned only by female technicians, serviced nearly 48,000 mobile phones in 2014 and expected the number to be higher this year.
“My dream now is to launch a national project for the maintenance and repairing of electronic devices that will serve women through the country,” she said.