வவுனியா தேக்குவத்தைப் பகுதிக்கு அண்மையில் சிங்களக் குடும்பம் ஒன்றுடன் நெருங்கிப் பழகிய வவுனியா தெற்கைச் சேர்ந்த வாகன உரிமையாளரால் அக் குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.
குறித்த குடும்பத்தில் கணவர் இராணுவத்தில் சேர்ந்து காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் தாயார் அப்பகுதியில் உள்ள ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் அந்த நிலையத்திற்கு வந்து செல்லும் வாகன உரிமையாளரான தமிழ்க்குடும்பஸ்தனுடன் தாய் நட்புக் கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.
இதன் பின்னர் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவந்த குறித்த குடும்பஸ்தரால் அப்பெண்ணும் அப் பெண்ணின் 18 வயதான மகளும் ஒரே தடவையில் கர்ப்பமாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
மகளின் கர்ப்பத்திற்கும் குறித்த குடும்பஸ்தரே காரணம் என அறிந்த சிங்களப் பெண் இது தொடர்பாக சட்டநடவடிக்கையில் இறங்குவுதற்காக வவுனியா பொலிசாரின் உதவியை நாடியுள்ளதாக வவுனியா பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.