‘ஜீன்ஸ்’ காற்சட்டை அணிந்த காரணத்தினால் பெண்ணொருவர் அவரது கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று முதுகல , உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நிரோஷினி குமாரி முனசிங்க என்ற, 2 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கணவன் மனைவியிடையே தினசரி மோதல் இடம்பெற்று வந்த தாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கொலைச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தின் போது அவரது ஒரு பிள்ளை வீட்டில் இருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சோகம்.. தாய் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்த சம்பவம். ( கடைசிக் கடிதம் எழுதிய நிமிடங்களின் சி.சி.டிவி காணொளி)
பலாங்கொடை நகரில் தாயொருவர் தானும் அருந்து தனது பிள்ளைக்கும் விஷத்தை பருகக் கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பலாங்கொடையில் அமைந்துள்ள விகாரையொன்றின் முன் அமர்ந்து தனது தற்கொலை முயற்சி தொடர்பில் கடிதம் எழுதும் காட்சி அங்கிருந்த சி.சி.டிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
தாய் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்துள்ளார். இதன்போது பிரதேசவாசிகள் தலையிட்டு தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன் போது தாயார் உயிரிழந்துள்ளார். குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.