2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று சமர்ப்பித்தார்.

இவ்வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

*பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

*புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

*பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

*சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.

*கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.

*எமது வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.

*சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.

*தரமான விதையினங்களை உற்பத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

*அதிக இரசாயன உரப்பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உரப்பாவனைகட்டுப்படுத்தப்படும்.

*பழ வகைகள் மற்றும் மரக்கறி விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் வங்கியில் பெறும் கடன் உதவிக்கு வட்டி வீதம் குறைக்கப்படும்.

*பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.

* – மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.

* 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைப்பு.

* புதிய தொழினுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.

* தேங்காய் உற்பத்திக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* தேயிலை ஏற்றுமதியின் போது ‘சிலோன் டீ’ என கட்டாயம் பெயரிட வேண்டும்.

* பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.

* பொக்குரு கம்மான ‘ திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.

* அலங்காரமீன் கைத்தொழிலில் ஈடுப்படுவர்களுக்கு கடன் உதவி.

* சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* தங்கம் மற்றும் மாணிக்க கற்கல் ஏற்றுமதி செய்ய விசேட பத்திரம்.

* காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு.

* பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.

* அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.

* கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.

* இந்தியாவில் காணப்படும் ‘ஆதார்’ திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.

* 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.

* புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.

* எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.

* இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

* வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

*சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.

*குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.

* அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.

* ஏற்றுமதியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு.

*ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*வெளிநாட்டு கட்டிட நிபுணர்கள் உள்நாட்டு கட்டிட நிபுணர்களுடன் இணைந்து செயற்படலாம்.

*தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.

*டைல்ஸ், கொங்கிறீட் இறக்குமதி வரி நீக்கம்.

*வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.

*கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.

*சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.

*கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜேயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.

*திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.

*உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

*புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.

*பாடசாலை மாணவர்களுக்கு 250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.

* ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

*தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்.

*தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.

*தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.

*ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.

*மின்சாரம் இல்லாத பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய சக்கதியிலான மின்சாரம்- 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலக்கூட வசதி

*ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.

* உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.

* தொழினுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.

*கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.

* மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.

* புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.

*2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.

*சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.

*பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.

* சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.

*குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.

* பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

*கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

* நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.

*பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.

*திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

* மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.

*நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.

* ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.

*தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.

* ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.

*வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.

*11 அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.

* தொழில்நுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.

*கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.

* மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.

*புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.

*2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.

*சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

* மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.

* பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வை -பை முறை.

* சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.

* குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.

* பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*நல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

* கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

*நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.

*பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.

* திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

* மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.

*நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.

* ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.

*தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.

*ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.

* வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.

* அத்தியாவசிய பொருட்களின் விலை 100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.

* பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.

* 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.

* சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு .

* நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.

* பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.

* கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.

* கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.

* கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.

*வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

* 2016 ஆம் ஆண்டில் அஸ்பெஸ்டோஸ் சீட் பாவனையை முற்றாக நீக்க திட்டம்.

*ஆங்கில தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.

Share.
Leave A Reply