தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக அமெரிக்க நடிகர் சார்ளி ஷீன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதையடுத்து, சார்ளி ஷீனின் முன்னாள் காதலிகளில் சுமார் 700 பேர் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 வயதான நடிகர் சார்ளி ஷீன் தனக்கு 4 வருடங்களாக எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கடந்த வாரம் தொலைக்காட்சி செவ்வியொன்றில் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த இவர் 3 தடவைகள் திருமணம் செய்தவர்.
அத்துடன் சுமார் 5000 பெண்களுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் முன்னர் கூறியிருந்தார்.
தனக்கு எச்.ஐ.வி. ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்ட சிலர் இத்தகவலை பகிரங்கமாக்கப் போவதாக தன்னை அச்சுறுத்தி தன்னிடம் 10 லட்சம் டொலர்கள் வரை பணம் கறக்க முயற்சித்ததாகவும் கடந்த வாரம் சார்ளி ஷீன் தெரிவித்திருந்தார்.
இந்த பகிரங்க அறிவிப்பின் மூலம், தன்னை அச்சுறுத்தி பணம் கறக்க முயற்சிப்பவர்களை செயலிழக்கச் செய்துவிடலாம் என அவர் நம்பியிருந்தார்.
ஆனால், சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. ஏற்பட்டுள்ளதாக அறிந்த அவரின் முன்னாள் காதலிகளில் பலர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சார்ளி ஷீன் மூலம் தமக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்குமோ என அவர்கள் அஞ்சுகின்றனர்.
”தனக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதை சார்ளி ஷீன் என்னிடம் ஒருபோதும் கூறவில்லை” என அவரின் முன்னாள் காதலியான ப்றீ ஒல்சன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சார்ளி ஷீனுக்கு எதிராக அவரின் முன்னாள் காதலிகளில் 700 பேர் வழக்குத் தொடரக்கூடும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே 75 பெண்கள் இது தொடர்பாக சட்டத்தரணிகளை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சார்ளி ஷீனுக்கு பெரும் புகழை பெற்றுக்கொடுத்த தொலைக்காட்சித் தொடர் “டூ அன்ட் ஏ ஹாவ்மேன்” எனும் தொடராகும்.
இத்தொடரில் சார்ளி ஷீனுடன் இணைந்து நடித்த நடிகை ஜெனி மெக்கார்த்தியும் சார்ளி ஷீன் மீது அதிருப்தி கொண்டுள்ளார்.
“சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து அவர் என்னிடம் கூறியிருக்க வேண்டும்.
“டூ அன்ட் ஏ ஹாவ்மேன்” தொடரில் சார்ளி ஷீன், ஜொனி மெக்கர்த்தி
…………………………………………………………………………………………
இது குறித்து அறிந்திருப்பதற்கான தகுதி எனக்கு உள்ளது” என ஜொனி மெக்கர்த்தி தெரிவித்துள்ளார்.