அம்பாறையில் அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாறை -கோணகல பிரதேசத்தில் உள்ள வயலில், கடந்த 18ஆம் நாள் இரவு அடையாளம் தெரியாத பறக்கும் மர்மப்பொருள் ஒன்று தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

மர்மப்பொருள் தரையிறங்கியதாக கூறப்படும் வயலில், விசித்திரமான அடையாளங்களை கண்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து, விசாரணைக்குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோணகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பி.சிறியாவதி என்பவர் தகவல் வெளியிடுகையில், “இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு காலையில் வயலுக்குச் சென்று பார்த்தோம். அங்கு தரையில் அடையாளங்கள் காணப்பட்டன. மூன்று துளைகளாக நான்கு இடங்களில் இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அடையாளம் தெரியாத பறக்கும் மர்மப்பொருள் பூமியில் தரையிறங்கியிருந்தால், இத்தகைய தடயங்கள் இருப்பது சாத்தியமே என்று, அடையாளம் தெரியாத மர்மப் பொருள்கள் பற்றிய ஆய்வுச் சங்கத்தைச் சேர்ந்த சாலிய சில்வா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply