யாழ்ப்பாணத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் பல இடங்களில் அனுஸ்ரிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளும் தமது அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியுள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில் மேற்குறித்த இரு கட்சிகளும் தத்தமது அலுவலகத்தில் நினைவு தினத்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடமாகாண சபை பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், பரஞ்சோதி ஆகியோரும் இதில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கான ஆஞ்சலியினைச் செலுத்தியிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்திலும் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.