இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை விட அதிகமாக பயப்படுகின்றது.

சுமார் எண்பத்து ஏழு கிலோ எடைகொண்ட இந்த நாய் ஆறு அடி உயரமாக உள்ளது. ஆனாலும், இந்த பலமான தோற்றம் பிரெஸ்லிக்கு பெரிதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார் இதன் உரிமையாளர் சியான்.
2ED3982F00000578-3335161-image-a-9_1448560149771

பிளாஸ்டிக் பை முதல் சிறிய வகை உயரமே உள்ள நாயான ‘வெஸ்டி’ வரை பிரெஸ்லியின் உயரத்துக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத எல்லாமே அதை பயமுறுத்துகின்றன.

2ED39AF200000578-3335161-image-a-1_1448561418272அதிலும், சின்ன வகை நாய்களைப் பார்த்ததும் உடனடியாக வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் பிரெஸ்லி தனது பாசமான நடவடிக்கைகளால் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

2ED39ADB00000578-3335161-image-a-2_1448559887155பயப்படும் சுபாவத்தால் ஸ்கூபி டூ என்ற செல்லப் பெயரால் அறியப்படும் பிரெஸ்லி தனது பயத்தில் ஆறுதலாக இருப்பதற்காக வாயில் ‘குஷனை’ சுமந்துகொண்டே வலம் வருகின்றதாம்.

2ED39AA900000578-3335161-image-m-6_1448559907177பிறந்தது முதலே தனது அரவணைப்பிலேயே வளர்ந்து வருவதால் ஒருவேளை இந்த உயரத்திலும் பிரெஸ்லி பயப்படுகின்றதோ? என்ற கேள்வி சியானுக்கு எழுகின்றதாம்.

2ED39A9700000578-0-image-a-32_1448549671493 (1)2ED399A800000578-0-image-m-31_14485496624902ED398EC00000578-0-image-a-26_14485492079992ED398B300000578-0-image-a-27_14485494295122ED3988100000578-3335161-image-a-8_14485601196232ED3984C00000578-3335161-image-a-7_1448559915931

Share.
Leave A Reply