சீனா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் கார்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென அந்தரத்தில் எழுந்து பறந்து விழுந்த சம்பவம் போக்குவரத்து பொலிசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ எந்த நாளில் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

வீடியோ காட்சியில் சாலை ஒன்றில் சில வாகனங்கள் போக்குவரத்து சிக்னலிற்காக நின்றுக்கொண்டு இருக்கின்றன.

அப்போது பின்னால், வேன் ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்து சிக்னலிற்கு அருகில் வரும்போது திடீரென அந்தரத்தில் எழுந்து பறந்து விழுகிறது.

இதுபோன்று அங்குள்ள மற்ற சில கார்களும் தரையை விட்டு எழுந்து பறந்து விழுகிறது.

இந்த காட்சியை கண்ட போக்குவரத்து பொலிசார், ‘இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது’ என்ற விடை தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

car_flying_002இந்த வீடியோ தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இணையத்தளத்தில் இது குறித்து பல்வேறு கருத்துக்களை நபர்கள் பரப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக நபர் ஒருவர் கூறுகையில், சாலைக்கு அடியில் செல்லும் மின்சார கம்பிகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், கார்கள் இவ்வாறு பறந்துள்ளன என விளக்கம் அளித்துள்ளார்.

இணையதளத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்காணோர் வியப்புடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் இனி சிறுநீர் கழிக்க முடியாது: அதிர்ச்சி பாடம் கற்பித்த ஜேர்மன் தொழில்நுட்பம் (வீடியோ இணைப்பு)

 

Share.
Leave A Reply