திருமண வைபவமொன்றில் பங்கேற்றிருந்த போது காணாமல் போன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மோதிரம், கடும் தேடுதலுக்கு பின்னர் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில், மிகமுக்கியஸ்தரின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. அதில், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். அந்த வைபவத்துக்கு வந்திருந்தவர்கள் மஹிந்தவுக்கு கைகொடுத்தனர்.

இந்நிலையில், மாணிக்கக்கற்கள் பொதிக்கப்பட்ட தன்னுடைய மோதிரம் காணாமல் போய்விட்டதாக, திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்த முக்கியஸ்தர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அந்த முக்கியஸ்தர்கள் ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்துக்குகொண்டுவந்தனர். அதன் பின்னர், சேவையாளர்கள் ஊடாக அந்த மோதிரம் கண்டெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

குண்டு துளைக்காத கார் வேண்டும் – மஹிந்த, மைத்திரியிடம் வேண்டுகோள்

rajapak_1352618fகுண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலமே மஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதால், தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்று இருக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

அதேவேளை மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத வாகனத்தை, தேர்தல் தோல்வியின் பின்னர் எடுத்துச் சென்று விட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply