ஸ்விட்­ஸர்­லாந்தில் குதி­ரை­களை மனி­தர்கள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்தும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­வ­தாக உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

 ஸ்விட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில், “டையர் இம் ரெச்ட்” எனும் விலங்கு உரி­மைகள் குழுவின் அங்­கத்­த­வர்கள் இது தொடர்­பாக கூறு­கையில், அந்­நாட்டில் சுமார் 10,000 பேர் மிரு­கங்­க­ளுடன் பாலியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதில் ஆர்வம் கொண்­ட­வர்­க­ளாக உள்­ளனர் என அஞ்­சப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

 கடந்த வரு­டத்தில் மாத்­திரம் குதி­ரைகள் மீது பாலியல் ரீதி­யான 105 தாக்­குதல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இது முன்­னெப்­போ­தை­யும்­விட மிக அதிக எண்­ணிக்­கை­யாகும்.

 இவற்றில் 10 சத­வீ­த­மான சம்­ப­வங்கள் குதி­ரை­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டமை தொடர்­பான சம்­ப­வங்கள் எனவும் இக்­கு­ழு­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

 இக்­கு­ழுவின் சட்ட நிபு­ண­ரான அன்ட்ரெஸ் ருட்­டின்மன் இது தொடர்­பாக கூறு­கையில், இந்த எண்­ணிக்­கை அதிர்ச்­சி­க­ர­மா­ன­தாக இருந்­த­போ­திலும் முறைப்­பாடு செய்­யப்­ப­டாத இத்தகைய சம்­ப­வங்­களின்   எண்ணிக்கையே அதிக பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக இருக்க வாய்ப்­புள்­ள­து என தெரி­வித்­துள்ளார்.

 ஸ்விட்­ஸர்­லாந்தில் அதிக எண்­ணிக்­கை­யான பண்­ணைகள் இருப்­பதும் அதி­க­மான குதி­ரை­யோட்ட செயற்­பா­டுகள் இருப்­பதும் இத்­த­கைய பாலியல் தாக்­கு­தல்­க­ளுக்கு ஒரு கார­ண­மாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­க­றது.

ஸ்விட்­ஸர்­லாந்தில் 18,000 பண்­ணை­களில் சுமார் 110,000 குதி­ரைகள் வசிப்­ப­தாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 2013 ஆம் ஆண்டில் பதிவாகிய மிருகங்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை 1,542 ஆகும். கடந்த வருடம் இது 1,709 ஆக அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply