எனது கட்சியான தமிழர் விடு­தலை கூட்­ட­ணியியை  சி.வி. விக்கினேஸ்வரன்  எடுத்து நடத்த தயாரானால்  உடனே வரவும். இந்த நிமிடமே   கட்சித்  திறப்பை  உங்கள்  கையில் தந்துவிட்டு  நான்  நடையை  கட்டுகிறேன்  என்கிறார் ஆனந்த சங்கரியார்.

இதேபோன்று  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி  தலைவரும் தனது கட்சியை  முதலமைச்சர் விக்கினேஸவரனிடம்  ஒப்படைக்க தயாராக இருக்கிறார். அதுவும்  விற்பனைக்கு உள்ளது.

அதுமட்டுமல்ல,  தமிழரசுக்கட்சியை சேர்ந்த சம்பந்தன், சுமந்திரன், மாவையார்  தவிர்ந்த  ஏனையோர்  தமிழ்தேசிய கூட்டமைப்பையும்  விக்கினேஸ்வரன் கையில் ஒப்படைக்க தயாராவுள்ளனர் என்பது  இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்வரன் பக்கம்  பலமான காற்று வீசுகிறது.   காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

இந்த சந்தர்ப்பத்தை  சரியாக  விக்கினேஸ்வரன் ஐயா  பயன்படுத்துவாரானால்,     எல்லா தமிழ்   அரசியல்   கட்சியினரையும்   உங்கள் தலைமையில் கீழ்   ஒன்று சேர்க்கலாம்.

ஆனந்தசங்­கரியார் விடுத்துள்ள  அறிக்கை..

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்வரன் படித்த பண்­புள்ள நம்­பிக்­கை­யா­னவர். அவர் ஏற்­பா­ரேயானால் எமது கட்­சியை இந்த நிமிடமே அவ­ரிடம் ஒப்­ப­டைக்க நான் தயா­ராக உள்ளேன் என்று தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் செய­லா­ளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்­பி­ன­ரு­மான வீ.ஆனந்தசங்­கரி தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;- என்­னுடன் செயற்­பட்ட மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். புனி­த­மான இந்த கட்சியை எதிர்­கா­லத்தில் வீதியில் விட்டுச் செல்ல முடி­யாது. மாசு­ப­டாத இயக்­க­மாக எமது கட்சி திகழ்­கின்­றது. இந்த நிலையில் அனைவரும் எமது கட்­சியில் இணைந்து கொள்­ள­வேண்டும்.

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் சமூ­கத்தில் முக்­கி­யஸ்­த­ராக உள்ளார். அவர் நல்­லவர். நம்­பிக்­கைக்­கு­ரி­யவர். படித்தவர் இதனால் கட்­சியை ஏற்­ப­தற்கு அவர் தயா­ரானால் இந்த நிமி­டமே அதனை ஒப்­ப­டைப்­ப­தற்கு நான் தயா­ராக இருக்­கின்றேன்.

நல்­ல­தொரு மனி­தரை முத­ல­மைச்­ச­ராக்­கி­விட்டு அதனைப் பறிப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றனர். அத்­த­கைய செயற்­பாட்டை அனு­ம­திக்க முடி­யாது. நாம் அனை­வரும் ஒன்­றாக இணைந்து செயற்­பட வேண்டும்.

விக்­கி­னேஸ்­வரன் சம்­ம­தித்தால் அவரை கட்­சியின் தலை­வ­ராக நாளைக்கே நிய­மிப்பேன். அவர் பிரே­ரிக்கும் மற்­றொ­ரு­வரை செயலாளராக நிய­மிக்­கவும் நான் தயா­ராக உள்ளேன்.

இதற்கு மேல் என்னால் எதனை செய்ய முடியும். நான் எனது கட்­சியை கற்­புத்­த­வ­றாத கட்­சி­யா­கவே வைத்­துள்ளேன். சம்­பந்­த­னு­டனோ, மாவை­யு­டனோ நான் இணை­வ­தற்கு தயா­ராக உள்ளேன்.

2004 ஆம் ஆண்டு இரண்டு வரு­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா கலைத்தார். இதனால் நான்கு வருட பிர­தமர் பத­வியை ரணில் இழக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அவ்வாறு நடந்தும் ஒரு இலட்சியத்திற்காக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதேபோல் நானும் ஒன்றிணைவதற்கு தயாராகவே உள்ளேன். ஒற்றுமை ஏற்படவேண்டும் என்பதே எனது அவாவாகும் என்றார்.

அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் வடக்கு முதல்வர் அவசர அழைப்பு. சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் விக்கி பதில்

vikineswarnஅனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன.

இன்று கூட இப்பேர்ப்பட்ட மக்கள் உதவி கோரி என்னிடம் வந்தார்கள். இன்று மக்கள் சந்திப்பு நாள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எம் மக்களை வலுவூட்டுவதற்குப் பாடுபட வேண்டிய தருணம் இது.

இதைவிடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். நான் இது பற்றிக் கவனமாகவே இருக்கின்றேன்.

அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலைபோகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்று விரும்புகின்றேன். இதுவே மக்களின் விருப்பமுமாகும்.

எனது சட்டக்கல்லூரி சமகால நண்பர் ஆனந்தசங்கரி அவர்கள் எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தி உள்ள கருத்துக்களுக்கும் அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூற முடியும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

போலித்தனம் காட்டாத, ஒரு நேர்மையான, விலைபோகாத அரசியில்வாதியான ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் வழங்கிய செய்தியை கேளுங்கள்!!

 

Share.
Leave A Reply