விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் வினயாகமூர்த்தி முரளிதரனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நியமித்தமை மற்றும் அமைச்சராக நியமித்தமை என்பன சரியான தீர்மானம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மனதில் இனவாதத்தை புகுத்துவது மிகவும் ஆபத்தானது. அரசியல் கைதிகளை விடுதலை செய்தமை தொடர்பாக சில சக்திகள் அரசு மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களது உள்ளங்களில் இனவாதத்தை விதைகின்றனர்.
கடந்த ஆரசாங்கத்தின் போது தடுத்துவைக்கப்பட்டவர்கள் 12,000 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் எவ்வாறு அரசின் மீது விரல் நீட்ட முடியும், என கேள்வி எழுப்பினார்.
தயவு செய்து வாக்குகளை பெறுவதற்காக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் என்பவற்றை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார். (நு)