யாழ். புங்குடுதீவு பகுதியில் தனது சொந்த மகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் சடலமாக மீடகப்பட்டுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி பகுதியை சேர்ந்த எஸ்.சிவரஞ்சன்(வயது33) என்ற குடும்பஸ்தர் தனது சொந்த மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார் என ஊர்காவற்றுறை பொலிஸில் உறவினர்களாலேயே முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவரை பொலிஸார் தேடிவந்த நிலையில் குறித்த நபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த நபர் தனது வீட்டிற்கு வந்திருந்ததாகவும், இந்த தகவலையடுத்து பொலிஸார் தேடிச் சென்ற நிலையில் அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்குள் தூக்கிடப்பட்டு உயிரிழந்த நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

Share.
Leave A Reply