தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு காணும் ஆலோ­சனை ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதில் பிரித்­தா­னிய தமிழர் பேரவை முழு முயற்சியில் ஈடு­பட்டு வரு­கின்­றது.

ஏனைய அமைப்­புக்­களின் ஒத்­து­ழைப்­பு­டனும் தமிழ்­நாட்­டி­லுள்ள அமைப்­புக்­க­ளு­டனும் இணைந்து பேரவை இம்­மு­யற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது.

தென்­னா­பி­ரிக்­காவும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்­றது. கடந்த மாதம் தென்­னா­பி­ரிக்­காவின் டேர்பன் நகரில் இவ்­வி­டயம் தொடர்பில் ஆராய பெரும்­பா­லான புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டனர்.

அந்தச் சந்­திப்பின் இறு­தியில் டேர்பன் பிர­க­டனம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அதில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களின் ஆலோ­சனை ஏற்றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தென்ற முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அந்த முடி­வின்­படி தமிழர் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணும் முயற்­சியில் நாம் ஈடு­பட்­டுள்ளோம் என பிரித்­தா­னிய தமிழர் பேரவையின் தலைவர் வி. ரவிக்­குமார் தெரி­வித்தார்.

புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் தொடர்பு கொண்டு முதலில் அவர்­களின் ஆலோ­ச­னை­களை எழுத்து வடிவில் பெறு­வ­தென முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தென்­னா­பி­ரிக்க அரசின் நல்­லி­ணக்­கத்­திட்டம் இலங்கை இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வா­காது என்­பதை தென்­னா­பி­ரிக்க அரசே ஒத்­துக்­கொண்ட­தாக பிரித்­தா­னிய தமி­ழர்­பே­ரவைத் தலைவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பெரும்­பான்­மை­யான கறுப்­பி­னத்­த­வரை சிறு­பான்­மை­யி­ன­ரான வெள்­ளை­யர்கள் அங்கு ஆக்­கி­ர­மித்து வந்­தனர். கறுப்பு இனத்­தோரின் விடு­தலை அங்கு சிறு­பான்­மை­யி­னரை பெரி­தாகப் பாதிக்­க­வில்லை.

ஆகையால் அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நல்­லி­ணக்­கத்­திட்டம் முற்­றிலும் வேறு­பட்­டது. ஆனால், இலங்­கையில் சிறு­பான்மை தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வ­தா­கவே குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைந்த தமிழ்­மொழி கொண்ட தமிழ் மாநி­ல­மொன்று தொடர்பில் பல தசாப்­தங்­க­ளாக பேசப்பட்டுவருகின்­றது. ஆனால் அவ்­வா­றான மாநிலம் ஒன்றை அமைப்­ப­தற்கு சிங்­களத் தலை­வர்கள் எதிர்ப்பு தெரி­வித்து வரு­வ­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இரு­த­ரப்பும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்ட ஆலோ­ச­னை­யொன்­றையே தென்­னா­பி­ரிக்க அரசு எதிர்­பார்க்­கின்­றது. அவ்­வா­றான ஆலோ­சனை கிடைப்பின் அந்­நாடு ஏனைய நாடு­களின் உத­வி­யுடன் இலங்கை அர­சிடம் அதனை சமர்ப்­பிக்க முன்­வ­ரலாம்.

தென்­னா­பி­ரிக்க அரசு இலங்கை பிரச்­சினை தொடர்­பாக பல்­வேறு புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் தொடர்ச்­சி­யாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடு­பட்டு வரு­வது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. மஹிந்த ஆட்­சிக்­கா­லத்தில் இருந்தே தென்­னா­பி­ரிக்கா இவ்விடயத்தில் ஆர்வம் காட்டி வரு­கின்­றது.

இலங்­கையில் அனைத்து இன மக்­க­ளுக்கும் சம உரிமை கிடைக்கும் விதத்தில் புதிய அர­சியல் யாப்பு கொண்டு வரப்­படும் என ஜனாதிபதியும் அடிக்­கடி கூறி வரு­கிறார். எனவே அந்த அர­சியல் யாப்­புக்­கு­ரிய யோசனை தெரி­விக்க தென்­னா­பி­ரிக்கா முயன்று வருகின்றது.

பிரித்­தா­னி­யா­வி­லுள்ள தென்­னா­பி­ரிக்க தூது­வ­ரா­லயம் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் தொடர்பில் உள்­ளதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

பிரித்­தா­னிய தமி­ழர்­பே­ரவை சகல புலம்­பெயர் தமி­ழர்­க­ளு­டனும் இணைந்து செயற்­ப­டு­வ­தையே விரும்­பு­கின்­ற­தென அதன் தலைவர் ரவி­குமார் குறிப்­பிட்டார். இலங்கை அரசு அண்­மையில் வெளி­யிட்ட புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுக்கு எதி­ரான தடை அறி­வித்­த­லுக்கு அவர் தமது கண்­ட­னத்­தையும் வெளி­யிட்டார்.

புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் அனைத்தும் அந்­தந்த நாடு­களில் பதிவு செய்­யப்­பட்­டவை. அவற்றைத் தடை செய்­வதால் இலங்கை அரசுக்கு அப­கீர்த்­தியே ஏற்­படும். இது ஒரு அறி­வு­பூர்­வ­மற்ற செயல் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்­பிட்டார்.

அனைத்து தமிழ் அமைப்­புக்­க­ளி­னதும் தனிப்­பட்ட நபர்­க­ளி­னதும் தடை உத்­த­ரவு உட­ன­டி­யாக நீக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தடை செய்­த­தற்­கான கார­ணமோ தடை நீக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணமோ இது­வரை இலங்கை அரசால் வெளி­யி­டப்­ப­ட­வில்­லை­யென்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாடு கடந்த தமி­ழீழ அரசு (TQTE) அமெ­ரிக்­காவில் பதிவு செய்­யப்­பட்ட அமைப்பு. அதே­போன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்­கி­ணைப்புக்குழுவும் (TCC) கன­டாவில் உல­கத்­த­மிழர் இயக்­கமும் (W.T.M) தடை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் அவை தமது செயற்­பா­டு­களை சர்­வ­தேச ரீதியில் மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றன.

சர்­வ­தேச ரீதியில் அவர்­களின் வேலைத்­திட்­டங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இலங்கை தமி­ழ­ருக்­கான போராட்­டங்­களில் அந்த அமைப்­புக்­களும் ஜன­நா­யக ரீதியில் ஈடு­ப­டு­கின்­றன. அவற்றை பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் பட்­டி­யலில் சேர்க்க முடி­யாது.

போரினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் முன்­னேற்­றத்­திற்­கான வேலைத்­திட்­டங்­களில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் ஈடு­பட்­டதன் கார­ண­மாக அவை முன்­னைய இலங்கை அரசால் தடை செய்­யப்­பட்­டன. ஆனால், புதிய நல்­லாட்சி அரசு அவற்றை முற்­றாக நீக்­காமல் இருப்­பது நல்­லி­ணக்­கத்­துக்கு பாதிப்­பா­கவே அமையும் என பிரித்­தா­னிய தமிழர் பேரவை குறிப்­பிட்­டுள்­ளது.

வட­மா­கா­ணத்தில் மாத்­திரம் இரா­ணுவம் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய 65 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்த விப­ரங்கள் பேர­வை­யிடம் பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் இவற்றில் 400 ஏக்கர் நிலம் மாத்­தி­ரமே மீளக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றும்­போது மேலும் ஆறா­யிரம் ஏக்கர் நிலம் கையளிக்கப்­பட இருப்­ப­தாகக் குறிப்­பிட்டார். ஆனால் அதையும் விடப் பத்து மடங்கு காணி இரா­ணு­வத்­தினர் வசம் உள்­ள­தையும் பேரவை குறிப்­பி­டு­கின்­றது.

சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை கவர வெளி­நாட்­ட­மைச்சர் இந்த தக­வலை குறிப்­பிட்­டாலும் தமிழ் மக்­களின் காணி­களை வழங்க அரசு இதுவரை முறை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. அந்­தக்­கா­ணி­களில் இரா­ணுவம் நீச்சல் தடாகம், விளை­யாட்டு, மைதானம் மற்றும் களி­யாட்ட விடு­தி­களை அமைத்து வரு­கின்­றது.

காணி மீள் கைய­ளிக்­கப்­ப­டாமை, அர­சியல் கைதிகள் விடு­த­லையில் தாமதம் காட்­டப்­பட்டு வருதல் போன்­றவை குறித்து தமிழர் மனித உரிமை அமைப்­புக்கள் ஐ.நா. மனித உரிமை ஆணை­ய­கத்­திற்கு அறி­வித்து வரு­கின்­றன.

அதே­நே­ரத்தில் இலங்கை அரசு வாக்­கு­று­தி­ய­ளித்­த­படி இன்­னமும் போர்க்­குற்ற உள்­நாட்டு விசா­ரணை தொடர்­பாக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

எனவே, இவை தொடர்­பாக எதிர்­வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு ஐ.நா.மனித உரிமை பேர­வைக்கு அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும். எனவே மார்ச் மாதம் சில நல்லிணக்க நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. அதிலும் அரசாங்கம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் மீண்டும் கால அவகாசம் கேட்கும் நிலையும் அரசுக்கு ஏற்படலாம்.

போர்க்குற்ற விசாரணைக்கு விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டாலோ அல்லது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலோ தமிழருக்கான தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டாலோ உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசு தோல்வியடையலாம்.

எனவே, சர்வதேசம் இலங்கை அரசுக்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்க வேண்டி ஏற்படலாம் என்றும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

Share.
Leave A Reply