அணு குண்டை விடவும் நூறு மடங்குககள் சக்தி வாய்ந்த ‘ஐதரசன் குண்டை’ தயாரித்திருப்பதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்க் அண் கூறியிருப்பதாக அந் நாட்டு அரச ஊடகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு உண்மையானால் வட கொரியாவின் அணு ஆயுத பலம் மிகப்பெரும் அளவில் அதிகரிக்கும்.

H-Bomb-e1449762322299

ஆனால் , இந்த அறிவிப்பு எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்று நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஐதரசன் குண்டை தயாரிப்பதற்கு வட கொரியா முயன்றிருக்கலாம் என்பது உண்மையாக இருக்கலாம்.

ஆனால் அத்தகைய ஒரு குண்டை தயாரிக்கும் ஆற்றல் இன்னமும் அதற்கு இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

Kim_Jong_Un_3523321b

North Korean leader Kim Jong

இதேவேளை , இன்றைய தினம் வட கொரியாவின் இராணுவ தளம் ஒன்றை பார்வையிட்ட பின்னர் ” கம்யூனிஸ வட கொரியா தனது சுயாதிபத்தியம் மற்றும் இறைமை ஆகியவற்றை நம்பகமாக பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அணு குண்டு மற்றும் ஐதரசன் குண்டு ஆகியவற்றை  வெடிக்க  வைக்கும் நாடாக மாறி இருக்கிறது ” என்று கிம் ஜொங்க் அன்   தெரிவித்ததாக வட கொரிய ஊடகம் அறிவித்தது.

இதேவேளை வட கொரியாவில் இழைக்கப்பட்டுள்ள மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் அந் நாட்டை மனித சர்வதேச குற்றவியல் நீந்திமன்றத்துக்கு பாரப்படுத்தும் விவாதம் ஐ. நா. பாதுகாப்பு சபையில் இன்று நடைபெறுகிறது.

ஆனாலும், வட கொரியாவின் தோழமை நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வட கொரியாவை காப்பாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா 2013 இல் அணு ஆயுத சோதனை நடத்தியமை சீனாவுடன் அதன் உறவை பாதித்திருந்தாலும், வட கொரியாவை சீனா இன்று ஐ. நா பாதுகாப்பு சபையில் பாதுகாக்கும் என்றே கருதப்படுகிறது.

ஆனால் , இன்றைய தினம்  ‘ ஐதரசன் குண்டை’  (hydrogen bomb) தாங்கள் தயாரித்திருப்பதாக கிம் ஜொங்க் அண் அறிவித்திருப்பது சீனாவின் முடிவில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. சீனா , வட கொரியாவின் நட்பு நாடு என்ற போதிலும் , அதன் அணு ஆயுத தயாரிப்பை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஐதரசன் குண்டு (hydrogen bomb) (எச்-குண்டு, இணைவு குண்டு அல்லது வெப்ப அணுக்கரு குண்டு எனவும் அறியப்படுவது) இலகுவான அணுக்கருவில் இணைவினால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓர் அணு குண்டு ஆகும்.

ஐதரசன் அணுவின் 4 அணுக்கருக்களை இணைச்சு ஹீலியம் என்ற மூலகத்தின் அணுக்கரு உருவாக்கப்படுகிறது. இது நடைபெறும் போது ஏராளமான   வெப்பம் உண்டாகும். இப்படித்தான் இயற்கையாக சூரியனில் வெப்பம் உருவாகிறது.

ஐதரசன் குண்டின் வெளிப்பகுதி மிகவும் உறுதியான கலப்புலோகத்தால் செய்யப்பட்டு அதனுள் இரண்டு வகையான டியூரியமும் ட்ரைட்டியமும் வைக்கப்படும்.

ஐதரசன் குண்டு

Teller-Ulam_device

250px-Teller-ulam-multilang

டெல்லர்-உலாம் (Teller–Ulam design) வடிவமைப்பின் அடிப்படைகள். துவக்கத்தில் நடக்கும் பிளவு குண்டிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் பிளவு மற்றும் இணைவு எரிபொருள் அடங்கிய உயர்நிலை தொகுப்பிற்கு அழுத்தமேற்படுத்த அத்தொகுப்பில் இரண்டாவது பிளவு வெடிப்பு மூலம் வெப்பம் உண்டாகிறது.

A : பிளவு கட்டம்
B : இணைவு கட்டம்

1. அதிர்வெடி தொகுப்பு
2. யுரேனியம் 238 (« இடைநிலை»)
3. வெற்றிடம் (« மிதத்தல்»)
4. திரித்தியம் வளிமம் (« கூடுதலாக», நீலத்தில்) புளீடோனியம் அலது யுரேனியம் சுற்றியிருக்க
5. பல்தைரீன்
6. யுரேனியம் 238 (« இடைநிலை»)
7. லித்தியம் டியூட்ரைடு 6 (இணைவு எரிபொருள்)
8. புளூடோனியம் (பற்றவைப்பு)
9. எதிரொளிப்பு சட்டகம் (X கதிர்களை இணைவு வினையாக்கம் ஏற்படுமாறு எதிரொளிக்க)

முதலில் அணுகுண்டை வெடிக்கச் செய்யும்போது வெப்பநிலை லட்சக்கணக்கான டிகிரி செல்சியசிற்கு உயரும். இந்த வேளை ட்யூட்ரியமும், ட்ரைட்டியமும் உருகும். இதனால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

இது நடை பெறும் போது, ஹீலியம் அணுக்கருவுடன் சேர்ந்து நியூத்திரன்களும் உருவாகும். இவை சேர்ந்து யுரேனியத்தை பிளக்கச்செய்து மேன்மேலும் வெப்பத்தை உண்டாக்கி பேரழிவை ஏற்படுத்துகிறது.

அமேரிக்கா, ரஷ்யா,பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா அகியா நாடுகளிடமே ஐதரசன் குண்டு இருக்கிறது.

English Summary
https://en.wikipedia.org/wiki/Thermonuclear_weapon

1192103249

Share.
Leave A Reply