ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சர்­வ­தேச அளவில் அதி­க­ரித்து வரும் செல்­வாக்கு தமிழர்­க­ளுக்குச் சாத­க­மாக அமையும் என்ற கருத்தை முன்­வைத்­தி­ருக்­கிறார் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவருமான இரா. சம்­பந்தன்.

மட்­டக்­க­ளப்பில் கூட்­ட­மைப்பின் பிர­மு­கர்­க­ளுடன் நடத்­திய சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

“மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொறுத்­த­வ­ரையில் சரி­யா­னதை செய்ய விரும்­பு­கிறார். சரி­யா­னதை செய்­யும்­போதே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்­படும், சமா­தானம் ஏற்­படும், நாடு முன்­னேறும் என அவர் நினைக்­கின்றார்.

அவ்­வா­றான நிலைப்­பா­டுகள் கார­ண­மாக அனைத்­து­லக மட்­டத்தில் அவரின் செல்­வாக்கு அதி­க­ரிக்­கி­றது.

அவ­ரது செல்­வாக்கு அதி­க­ரிக்கும் அள­வுக்கு எமக்கும் நன்­மை­ய­ளிக்கும். அப்­போது அனைத்­து­லக சமூ­கத்தின் கருத்­திற்கு அவர் இடமளிப்பார்.”

இது தான் அவர் குறிப்­பிட்ட விடயம். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செல்­வாக்கு சர்­வ­தேச அளவில் அதி­க­ரிக்கும் போது, அவர் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்குள் சிக்கிக் கொள்வார் என்­பதே இதன் சாராம்சம்.

இரா.சம்­பந்­தனின் கணிப்பு சரி­யாக அமைந்தால், சர்­வ­தேச அழுத்­தங்கள் தமிழர் தரப்­புக்குச் சாத­க­மா­ன­தாக மாறும் வாய்ப்­புக்கள் உள்­ளன.

ஆனால், அதி­க­ரித்து வரும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செல்­வாக்கு, சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணியும் ஒன்­றாக இருக்­குமா என்ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதம், போரை முடி­வுக்குக் கொண்டு வந்த போது, ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவை உலகம் இரண்டு வித­மாக நோக்­கி­யது.

ஒரு தரப்பு அவரை மனித உரி­மை­களை காலில் போட்டு நசுக்­கிய ஒரு சர்­வா­தி­கா­ரி­யாக பார்த்­தது. அதனை தமி­ழர்­களின் கண்­ணோட்­டத்­துடன் ஒப்­பி­டலாம்.

இன்­னொரு தரப்பு பயங்­க­ர­வா­தத்தை வேரோடு அழிப்­பதில் வெற்­றி­பெற்ற ஒரு அபூர்வ தலை­வ­ராக பார்த்­தது. இது இலங்கை அரசின் கண்­ணோட்­டத்தை ஒத்­தது.

mahinda2brajapaksa2bsmiles2bduring2ba2bmeeting2இந்த இரண்டு நிலை­களிலும், மஹிந்த ராஜபக்ஷவை பயங்­க­ர­வா­தத்தை வேரோடு அழிப்­பதில் வெற்றி பெற்ற தலை­வ­ராக பார்த்த நாடுகளே அதி­க­மாக இருந்­தன. அந்தக் கருத்தே வலு­வாக இருந்­தது.

காரணம், செப்டெம்பர் 11 தாக்­கு­த­லுக்குப் பின்னர், பயங்­க­ர­வாதம் என்­பது உல­கத்தை அச்­சு­றுத்தும் ஒன்­றா­கவே பெரும்­பா­லான நாடுகளால் பார்க்­கப்­பட்­டது.

அர­சு­க­ளுக்கு எதி­ரான எல்லா போராட்­டங்­களும் கிட்­டத்­தட்ட பயங்­க­ர­வா­த­மா­கவே பார்க்­கப்­ப­டு­கின்ற ஒரு நிலை அதனால் ஏற்­பட்­டது. அத்­த­கைய துர­திஷ்ட நிலைக்குள் தமி­ழர்­களின் ஆயுதப் போராட்­டமும் சிக்கிக் கொண்­டது.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான உல­க­ளா­விய போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த போது, அத்­த­கைய போராட்டம் வெற்றி பெறுமா? என்ற சந்­தே­கங்கள் உல­க­ளவில் இருந்­தன.

ஏனென்றால், ஆயு­தப்­போ­ராட்ட அமைப்­பு­களை அடி­யோடு அழிப்­பது சாத்­தி­ய­மில்லை என்ற கருத்து சர்­வ­தேச மட்­டத்தில் காணப்­பட்­டது. அதற்­கான முன்­னு­தா­ர­ணங்­களும் அரி­தா­கவே காணப்­பட்­டன.

இந்தத் தரு­ணத்தில், பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்தில் வெற்­றியைப் பெறலாம் என்று நம்ப வைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் ஒன்று சர்­வ­தேச சமூ­கத்­துக்கு கிடைத்­தது. இலங்­கையில் விடு­தலைப் புலிகள் இயக்கம் தோற்­க­டிக்­கப்­பட்­டதை, ஒரு முன்­னு­தா­ர­ண­மாக பல நாடுகள் காட்ட முனைந்­தன.

அது மஹிந்த ராஜபக் ஷவை உல­க­ளவில் பெரும் செல்­வாக்குப் பெற்­ற­வ­ராக மாற்­றி­யது.

மனித உரி­மைகள் பற்­றிய விமர்­ச­னங்­க­ளை­யெல்லாம் பின்­தள்ளிக் கொண்டு, அது அவரை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யது.

இந்த நிலை தான், போர் முடி­வுக்கு வந்­த­வுடன் அதில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­களை கண்­டிக்கும் வகையில் கூட்­டப்­பட்ட ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் விசேட கூட்­டத்தில் சுவிஸ் அர­சாங்கம் கொண்டு வந்த தீர்­மா­னத்­தையும் தலை­கீழாகப் புரட்டிப் போட்­டது.

இலங்­கையின் மனித உரிமை மீறல்­களைக் கண்­டிப்­ப­தற்­காக கூட்­டப்­பட்ட அந்தக் கூட்டம், கடை­சியில் பயங்­க­ர­வா­தத்தை அடி­யோடு அழித்த இலங்கை அர­சாங்­கத்­துக்குப் பாராட்டும் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வழி வகுத்­தது.

போரின் முடிவில் மனித உரிமை மீறல்­களைக் கண்­டித்த நாடு­களை விட பயங்­க­ர­வா­தத்தை அடி­யோடு அழித்­த­தற்­காக பாராட்­டிய நாடு­களே அதிகம்.

இந்த நூற்­றாண்டில் பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்த முத­லா­வது உலகத் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ கொண்­டா­டப்­பட்டார். அது அவரது செல்­வாக்கை சர்­வ­தேச மட்­டத்தில் அதி­க­ரிக்கச் செய்­தது. அமெ­ரிக்­காவும் வேறு பல நாடு­களும் கூட, அவரை ஆத­ரித்­தன.

அவ்­வாறு செய்­வதன் மூலம், இலங்­கையில் நடந்த மீறல்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறச் செய்­யவும், நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் முடியும் என்று பல நாடுகள் நம்­பின.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவின் செல்­வாக்கு அதி­க­ரித்த போதிலும், அத்­த­கைய அழுத்­தங்­க­ளுக்கு அவர் அடி­ப­ணி­ய­வில்லை.

 

மேற்­கு­லகின் அழுத்­தங்­க­ளுக்குப் பிடி­கொ­டுக்­கா­த­வ­ராக அவர் நடந்து கொண்டார்.

கடை­சியில், வேறு வழி­யின்றி, மஹிந்த ராஜபக் ஷவை அதி­கா­ரத்தில் இருந்து அகற்ற வேண்­டிய நிலைக்கு அந்த நாடு­களே தள்ளப்பட்டன.

அது போன்­ற­தொரு நிலை மைத்­தி­ரி­பால சிறி­சேன விட­யத்தில் ஏற்­ப­டாது என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை.

ஆனாலும், இங்கு சாத­க­மான ஒரு விடயம் உள்­ளது. மஹிந்த ராஜபக் ஷவுக்கு போரில் வெற்­றியை ஈட்­டி­யதன் மூலம் பெற்ற உள்­நாட்டுச் செல்­வாக்கு அவரை சர்­வ­தே­சத்தின் முன்­பாக மண்­டி­யி­டாத தலை­வ­ராக நிற்க வைத்­தது.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு உள்­நாட்டில் செல்­வாக்கு இருந்­தாலும், மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருந்த அள­வுக்கு அலையை ஏற்­ப­டுத்­த­வில்லை.

ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்றி என்­பது, மகிந்த ராஜ­பக்­சவின் எதிர்ப்பு அலை­யினால் சாத்­தி­ய­மா­னதே தவிர, மைத்­தி­ரி­பால சிறி­சேன மீதான கவர்ச்சி அலை­யினால் ஏற்­பட்ட ஒன்று அல்ல.

எனவே, சர்­வ­தேச அளவில் மைத்­தி­ரிக்கு அதி­க­ரித்து வரும் செல்­வாக்கு அவர் மீது கூடுதல் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிப்­ப­தற்கும், அதற்கு அவர் வளைந்து நெளிந்து போவ­தற்கும் கூடுதல் வாய்ப்­பு­களை அளிக்­கலாம்.

ஐ.நா பொதுச்­சபைக் கூட்ட்­டத்தில் பங்­கேற்கச் சென்­றி­ருந்த போதும், மோல்­டாவில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போதும், உலகத் தலை­வர்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் படம் எடுப்­ப­தற்கு முண்­டி­ய­டித்­த­தாக கூறு­வதில் அமைச்­சர்கள் பலரும் பெருமைப்­பட்டுக் கொண்­டனர். இது உண்­மையும் கூட.

தமிழர் தரப்பைப் பொறுத்­த­வ­ரையில் இது அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய விட­யமும் தான்.

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் பல்­வேறு விட­யங்­களில் விட்டுக் கொடுத்து நெகிழ்ந்து கொடுப்­ப­தான கருத்து சர்வதேச அளவில் வலுப்­பெற்று வரு­வதும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­வதும் தமி­ழரின் மீதான கவ­னத்தைக் குறைப்­ப­தா­கவே பல­ராலும் கரு­தப்­ப­டு­கி­றது.

ஆனால், இதற்குப் பின்­னாலும் மைத்­தி­ரிக்கு ஒரு பொறி இருக்­கி­றது என்­பதைத் தான் இரா.சம்­பந்தன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

சர்­வ­தேச சமூ­கத்­தினால் எந்­த­ள­வுக்கு அவர் கொண்­டா­டப்­ப­டு­கி­றாரோ அந்­த­ள­வுக்கு அவர் சர்­வ­தேச சமூ­கத்தின் கருத்­துக்­க­ளுக்கும் செவிம­டுக்க வேண்­டிய நிலை ஏற்­படும் என்று அவர் கணிக்­கிறார்.

அதில் உண்மை இல்­லா­மலும் இல்லை.

2002இல் இலங்கை அர­சாங்­கத்­துடன் போர்­நி­றுத்த உடன்­பாடு செய்து கொண்ட போது, விடு­தலைப் புலி­க­ளுடன் மேற்­கு­லகம் நெருங்கிப் பழ­கி­யது.

20090208174712!Prabhakaranநோர்வே, ஜப்பான் போன்ற நாடு­களின் ஊடாக அமெ­ரிக்கா கூட புலி­களை வசப்­ப­டுத்த முயன்­றது.

புலி­களை இந்த நாடுகள் தலையில் வைத்துக் கொண்­டா­டி­ய­தற்குக் கார­ணமும் இருந்­தது.

புலி­களை அர­சியல் வழிக்­கு­ம­றைக்கு கொண்டு வரும் முயற்­சியே அது.

பிர­பா­க­ர­னுக்கு வேட்டி கட்டிப் பார்க்க அமெ­ரிக்கா ஆசைப்­பட்­டது.

அதற்­காக, தலையில் தூக்கி வைத்துக் கொண்­டா­டிய அதே­வேளை, புலிகள் மீது தடை­களை விதித்து அழுத்­தங்­க­ளையும் கொடுத்தது.ஆனால் அதற்குள் புலிகள் அகப்­ப­ட­வில்லை.

இது போன்று, இப்­போது தலையில் வைத்துக் கொண்­டா­டப்­படும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சர்­வ­தேச விருப்­பங்­களை நிறை­வேற்ற வேண்­டிய பொறிக்குள் சிக்கிக் கொள்வார் என்று இரா.சம்­பந்தன் கணக்குப் போட்டிருக்கிறார்.

சர்வதேசத்தின் கருத்துக்கு இவர் இடமளிக்க வேண்டியதொரு சூழல் ஏற்படும் போது, அது தமிழர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முதிர்ந்த, பக்குவமான அரசியல் தலைவர் என்ற வகையில் அவரது அரசியல் கணிப்பு சரியானதாக அமைந்தால், மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேச சமூகத்தின் கருத்துக்கு செவிமடுப்பவராக இருந்தால், அது தமிழருக்கு சாதகமானதாகவே அமையும்.

அதற்கு, மைத்திரிபால சிறிசேனவும், இன்னொரு மஹிந்த ராஜபக் ஷவைப் போல மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

அதைவிட, சர்வதேச அரசியல் சூழமைவும், இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகத் தொடர வேண்டும்.

அவ்வாறானதொரு நிலை இல்லாவிட்டால் அதாவது, மேற்குலகின் பிடிக்குள் சிக்காமல் இலங்கை தப்பிக்க முனையும் ஒரு சூழல் ஏற்பட்டால், வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய கதையாகி விடும்.

Share.
Leave A Reply