தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் இவ்விரண்டு சந்தேக நபர்களும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மாதம் 7.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் 04.11.2015 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டிருந்தார்.
மீண்டும் புதன்கிழமை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் முன்னிலையில் இவர்களிருவரையும் ஆஜர்படுத்திய போது இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலய தேவலாயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.