யுத்தம் உக்­கி­ர­ம­டைந்­த­மையால் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டுக்குள் நானும் கண­வரும், மூன்­று­ பிள்­ளை­களும் சென்­றி­ருந்­த­போது சோதனைச்­சா­வ­டியில் வைத்து விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்­தர்­களுள் ஒரு­வ­ரான சபேசன் என்­ப­வரே இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கணவரை அடை­யாளம் காட்­டினார்.

அதன்­பின்னர் மூன்று இரா­ணு­வத்­தினர் சகிதம் வந்து எனது கண­வனைப் பிடித்­துச்­சென்­றன­ரென தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் உள்­ள­கப்­பா­து­காப்­புப்­பி­ரிவு முக்­கி­யஸ்­த­ரான வண்­ணக்­கிளி மாஸ்டர் என அழைக்­கப்­படும் விஜ­ய­கு­மாரின் மனைவி இள­வி­ஜினி சாட்சியம­ளித்தார்.

மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான காணா­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் ஆறா­வதும் இறு­தி­யு­மான அமர்வு நேற்று புதன்­கி­ழமை தெல்­லிப்­பழை பிர­தே­ச­செ­ய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் சாட்­சி­யத்தில் மேலும் தெரி­விக்­கையில், எனது கணவர் விஜ­ய­குமார். எனக்கு ஒரு பெண்­பிள்­ளையும் இரண்டு ஆண்­பிள்­ளை­க­ளு­மாக மூன்­றுபேர் உள்­ளனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த நிலையை எட்­டி­ய­போது 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திக­தி­யன்று நாம் கால்­ந­டை­யாக வட்­டு­வாகல் ஊடாக இரா­ணுவக் கட்­டுப்­பாட்டு பிர­தே­சத்­திற்குள் சென்றோம். அதன்­போது சோத­னைச்­சா­வ­டியில் வரி­சையில் நின்றோம்.

அத­னைத்­தொ­டர்ந்து சோத­னைக்­காக இரா­ணு­வத்­தினர் அரு­கே­சென்­ற­போது எனது இரண்­டா­வது மகனை கையில் வைத்துக்கொண்டிருந்த கண­வரை தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இணைந்து காவற்று­றைப்­பி­ரிவில் செயற்­பட்டு பின்னர் அதிலி­ருந்து விலகி இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்த சபேசன் என்­பவர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் காட்­டிக்­கொ­டுத்தார்.

எனது கணவர் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இணைந்து கொண்டு முதலில் கிட்டு பீரங்கி படைப்­பி­ரிவில் கேணல் பானு­வுக்கு அடுத்த பத­வி­நி­லையில் செயற்­பட்­டி­ருந்தார்.

அதன் பின்னர் உள்­ள­கப்­பா­து­காப்பு பிரிவில் முக்­கி­யஸ்­த­ராக செயற்­பட்­டி­ருந்தார். ஆகவே, அவரை நன்­க­றிந்த சபேசன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் காட்­டிக்­கொ­டுத்தார்.

அத­னைத்­தொ­டர்ந்து சபேசன் மற்றும் மூன்று இரா­ணு­வத்­தினர் வரு­கை­தந்து எனது கண­வரை பிடித்­துச்­சென்­றனர். கணவர் மூத்­த­ம­கனை என்­னி­டத்தில் கைய­ளித்­து­விட்டு அவர்­க­ளுடன் சென்­றி­ருந்தார்.

அதன் பின்னர் இடைத்­தங்கல் முகா­மிற்கு கொண்டு செல்­வ­தற்­காக என்­னையும் பிள்­ளை­க­ளையும் சில நாட்கள் தடுத்­து­வைத்­தனர். அந்த நேரத்தில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வழங்­கினால் உங்­களின் கண­வரை விடு­தலை செய்­வோ­மென சபேசன் என்­னி­டத்தில் கூறினார்.

எமது பொருட்­களை சோத­னை­யி­டும்­போது பொதியில் காணப்­பட்ட இரண்டு இலட்­சத்தை அவர்கள் கண்­ட­பின்­னரே அவ்­வாறு கோரியிருந்­தனர்.

எனவே எதுவும் செய்­ய­மு­டி­ய­ாத இக்­கட்­டான நிலை­மையில் நான் அப்­ப­ணத்தை அவர்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்தேன். அதன்­பின்னர் எனது கண­வனை அவர்கள் விடு­தலை செய்­யவே இல்லை.

அதே­நேரம், எனது கண­வ­ரைப்­போன்று தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கி­யஸ்­தர்கள் பலரை சபே­சனே இரா­ணு­வத்­தி­ன­ரி­டத்தில் காட்டிக்­கொ­டுத்­துக்­கொண்­டி­ருந்தார்.

அதற்­க­டுத்த ஓரிரு நாட்­களில் எம்மை இடைத்­தங்கல் முகா­முக்கு கொண்டு சென்­றனர். அதன் பின்னர் கணவர் தொடர்­பான விப­ரங்கள் எத­னை­யுமே நான் அறி­ய­வில்லை.

ஆறு­மாத முகாம் வாழ்­வுக்கு பின்னர் எனது சொந்த மண்­ணான பன்­னா­லைக்குத் பிள்­ளை­க­ளுடன் திரும்­பினேன். அதன்­பின்னர் யாழ்ப்­பாணம் குற்­றத்­த­டுப்பு புல­னாய்­வுப்­ பி­ரி­வி­ன­ரி­டத்தில் சென்று சபே­சனின் பெயரைக் கூறி­ வி­சா­ரித்தோம்.

அதன்­போது அவர்கள் ஒரு­வரை கூட்­டிக்­கொண்டு வந்­தார்கள். அது நான் குறிப்­பிட்ட நபர் இல்லை. அவர் சபேசன் என்ற பெயரில் இருக்கும் வேறொரு நப­ராவார்.

தற்­போதும் எனது கண­வ­னைத்­தே­டிக்­கொண்டே இருக்­கின்றேன். சபேசன் என்பது அவருடைய விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயராகும்.

அவருடைய உண்மையான பெயர் கூட தெரியாது. ஆனால் அவரை எந்த சந்தர்ப்பத்திலும் என்னால் இனங்காட்ட முடியும். எனக்கு இழப்பீடுகள் அவசியமில்லை. எனது கணவருக்கு என்ன நடந்தது அவர் எங்குள்ளார் என்பதே எனக்கு தேவை.

சபேசன் பற்றிய தகவல்களை கண்டறிந்தால் எனது கணவன் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுங்களென ஆணையாளரிடத்தில் கோரிக்கை விடுத்தார்.

Share.
Leave A Reply