மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சௌபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.
பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.
பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகா பாக்கியசாலிகளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர்களாகவும் பெரியோர்களைப் பக்தியுடனும், மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள்.
புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தலங்களுக்கும் திருக்கோயில்களுக்கும் சென்று தெய்வ தரிசனம் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள்.
சாந்த சுபாவமும், தெய்வ பக்தியும் மிக்க இவர்கள், கணவரின் பணிவிடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போகவிச்சை குறைவைக் குறிப்பதாகும்.
வெண்மை நிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் காணப்படுவது வறுமையைக் குறிக்கும். வெண்மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும்.
பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாகப் பெற்றவர்கள் கொடூர மனமுடையவர்களாகவும், நல்லோரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களாகவும், நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகல விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்துவார்கள்.
பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள், வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப் போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்களாகவும், தன்னம்பிக்கையற்ற வெகுளிகளாகவும் இருப்பார்கள்.
பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர்களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங்கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள்.
வெறுப்படையும் இயல்பும், தயவு தாட்சண்யமற்ற மனப் போக்கும் கொண்டவர்களாக இருப் பார்கள். பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்திற்கும், சுய தேவைப் பூர்த்திக்காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள்.
உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளிவாகவும் மேல்நோக்கிச் செல்வனவாகவும் அமையப் பெற்றவர்கள், அன்பு மிக்க நல்லதொரு கணவனையடைவார்கள்.
பெண்களின் நட்சத்திர பலன்கள்
ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.
1. அஸ்வினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். கடவுள் பக்தி அதிகமிருக்கும்.
2. பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.
3. கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.
4. ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.
5. மிருகசீரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடுபாடு உடையவர்.
6. திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.
7. புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கௌரவம் படைத்தவர்கள்.
8. பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.
9. ஆயிலியம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.
10. பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.
11. உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.
12. அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.
13. சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.
14. சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.
15. விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.
16. அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.
17. கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.
18. மூலம்: குரோதமானவர்கள். வெறுப் பும், விகற்பமும் மிக்கவர்கள்.
19. பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.
20. உத்திராடம்: பேரும், புகழும் மிக்க வர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுப விப்பவர்கள். உல்லாசவாசிகள்.
21. திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக்கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.
22. அவிட்டம்: சகல சௌபாக்கியங்களை யும் பெற்றவர்கள். பெருந்தன்மையானவர் கள். கருணை மிக்கவர்கள். நேர்மையான வர்கள்.
23. சதயம்: பிற பெண்களை நேசிப்பவர் கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப்பாக இருப்பவர்கள்.
24. பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.
25. உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.
26. ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.
27. மகம்: ஆசார அனுஷ்டானங்களை அனுசரிப்பவர்கள் பாசமிக்கவர்கள்