சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் தலைமறைவான நடிகர் சிம்புவைப் பிடிக்க சென்னை காவல் துறையின் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் நாள்தோறும் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தப்பிச்சென்ற சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் சென்னை காவல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

23-1450867085-simbu4511

பீப் பாடல்
ஆபாச சொற்களுடன் கூடிய பீப் பாடல் பாடி அதனை வெளியிட்ட குற்றத்திற்காக சிம்பு, அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.ஆனால் இருவருமே கோவை போலீசார் சொன்ன தேதியில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வருகின்ற ஜனவரி 2 ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.
23-1450867126-simbu-with-varalakshmi-s121

ஒத்திவைப்பு
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், சிம்பு முன்ஜாமீன் கோரிய வழக்கை ஜனவரி 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மேலும் சிம்புவின் முன்ஜாமீன் மனுவுக்கு பதில்மனு ஒன்றை போலீஸ் தாக்கல் செய்யவும், ஜனவரி 2 ம் தேதி சிம்பு ஆஜராக வேண்டும் என்பதன் கால அவகாசத்தை நீட்டிக்குமாறும் போலீஸ்க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

23-1450867110-simbu-in-event-600

சிம்புவைக் கைது செய்ய
மேலும் இந்த வழக்கில் போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை என்றும், தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் நீதிபதி உத்தவிட்டார்.23-1450867097-simbu345

சிம்பு தலைமறைவு
சிம்புவிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு சிம்பு இல்லை. மேலும் கடந்த 10 நாட்களாக அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை விட்டு சிம்பு தலைமறைவாக இருக்கிறார் என்ற முடிவிற்கு வந்த போலீசார் சிம்புவை தேடும் பணியில் தற்போது இறங்கி உள்ளனர்.23-1450867064-simbu735-600

3 தனிப்படைகள்
இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நடிகர் சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் சிம்பு இல்லை என்பதால் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
மேலும் சிம்புவைப் பற்றி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிம்புவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களை தற்போது போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
23-1450867290-simbu2332-600
சிம்பு கைது
இந்த வழக்கில் சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலையில், காவல் துறையினர் வேகமாக சிம்புவை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பீப் பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார்? என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள யூடியூப் தலைமையகத்துக்கு சென்னை போலீசார் மெயில் ஒன்றையும் அனுப்பி,பீப் பாடலை இணையத்தில் வெளியிட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
முதல் முறை அனுப்பிய மெயிலுக்கு சரியான பதில் வராத நிலையில் 2-வது முறையும் போலீசார் இந்த மெயிலை அனுப்பி இருக்கின்றனர்.
Share.
Leave A Reply