நத்தார் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் ஜேசுபாலனின் பிறப்பை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் அருட்தந்தை யாவீஸ் அவர்களினால் திருப்பள்ளி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆண்டில்
ஜேசுவின் பிறப்பினை வரவேற்று நாட்டுக்கு சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும் என பிரார்த்தனை இடம் பெற்றுள்ளது.
பெருந்திரளான கிறிஸ்த்தவ மக்கள் நள்ளிரவு ஆராதனையில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.