நுவரெலியா – ரம்பொட பிரதான வீதியின் வெதமுல்ல பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று மோதியதில்  கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண் நுவரெலியாவில் இருந்து ரம்பொடை நோக்கி அதிக வேகமாக வந்த பாரவூர்தியில் மோதியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

விற்பனை நிலையமொன்றில் பணிபுரியும் தனது கணவருக்கு மதிய உணவு எடுத்து வரும் போதே குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

குறித்த பெண் லபுகெலே பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் கொத்மலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து சந்தேகத்தின் பேரில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொத்மலை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை விபத்தையடுத்து அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.

Share.
Leave A Reply