நானாட்டான் – வங்காலை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் சமூர்த்தி உத்தியோகஸ்தராக கடமையாற்றும் சுமன் என அழைக்கப்படும் என்.ஸ்ரான்லி போல் லெம்பேட்(வயது-33) இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த குறித்த சமூர்த்தி உத்தியோகஸ்தர் இன்று திங்கடக்கிழமை மாலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் வங்காலையில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த போது வங்காலை வீதியூடாக நானாட்டான் நோக்கி சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது குறித்த சமூர்த்தி உத்தியோகஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதோடு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கில் துண்டு துண்டாக உடைந்துள்ளது.
சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதியை மன்னார் பொலிஸார் கைது செய்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.