வில்பத்து பகுதியில் இடம்பெறுவதாக கூறப்பட்ட காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக பஹியங்கல ஆனந்தசாகர தேரர் மற்றும் அமைச்சர் ரிஸாட் பதியூதின் இடையேயான தொலைக்காட்சி விவாதம் நேற்று இடம்பெற்றிருந்தது.

ஹிரு தொலைகாட்சியில் ‘சலக்குன’ விவாத நிகழ்ச்சியில் இருவருக்கும் நேற்றும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்ச்சியின் போது இருவருக்கிடையிலும் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆனந்தசாகர தேரர்,  அரசினால் ஒதுக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமான நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் அமைச்சர் ரிசாட் இதனை மறுத்திருந்தார்.

இது இவ்வாறு இருக்க இறுதியில் தான் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லையென  இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனின் மீது சத்தியம் செய்து கூறுமாறு அமைச்சரிடம் பஹியங்கல ஆனந்தசாகர தேரர் கோரியிருந்தார்.

எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply