மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது.
அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை போல இல்லாது, ஆறறிவு கொண்ட மனிதனாக நடந்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக அந்த ஆறாவது அறிவு!!! எப்போதும் கொடுத்து பழக வேண்டும், வாங்கி பழக கூடாது. எனவே, உங்கள மனைவி ஆரம்பிப்பதற்கு முன்பே, நீங்கள் அவரை புகழுதல், பாராட்டுதல், காதல் வார்த்தைகள் பேசுதல், கொஞ்சுதல் என தொடங்கிவிட வேண்டும். தினம் தினம் இல்லையெனிலும் கூட, குறைந்தது வார இறுதியிலாவது அவரிடம் அன்பாக, பாசமாக அவருக்கென நேரம் ஒதுக்க வேண்டும்
அந்த நேரத்தில் உங்கள் இருவரை பற்றியும், இருவர் மத்தியிலான விஷயங்கள் மட்டுமே பேசி மகிழ வேண்டும். இனி, உங்கள் மனைவியின் உச்சிக் குளிர நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்பற்றி பார்க்கலாம்….
16-1447658441-1complimentstomakeyourspousefeellikesuperstar

தேவதை
காக்கைக்கு தன் குஞ்சி பொன் குஞ்சு என்பதை போல தான் நீங்களும் இருக்க வேண்டும். அவரவருக்கு அவரவர் மனைவியே ரம்பை, ஊர்வசி, மேனகை. இதை மனதில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது அவர்களது காதில் விழும்படி உரைக்கவும் வேண்டும். யார் கூறாவிட்டாலும், தனது கணவன் தன்னை அழகு என கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா பெண்களிடமும் இருக்கும்.
16-1447658449-2complimentstomakeyourspousefeellikesuperstar

சமையலை புகழ வேண்டும்
வீட்டில் என்ன தான் மனைவி நன்றாக சமைத்தாலும், நொட்டைப் பேச்சு பேசுவது என்பது தான் ஆண்களுக்கு தெரிந்த ஒரே விஷயம். இது தாத்தாவில் இருந்து பேரன் வரை அனைவரும் கடைபிடிக்கும் செயல். இதை விடுத்து, அவர்களது சமையல் நன்றாக இருக்கிறது என்று அவர் பரிமாறும் போது ஒரு வார்த்தை புன்னைகையோடு கூறி பாருங்கள். நாளையில் இருந்து சமையலோடு சேர்ந்து காதலும் கமகமக்கும்.
16-1447658457-3complimentstomakeyourspousefeellikesuperstar
நன்றி உரைத்தல்
உறவுக்குள் நன்றி கூறக்கூடாது தான். ஆனால், அவர்களை பாராட்டலாம். உங்களுக்காக உணவு சமைக்கும் போது, உங்களது துணியை இஸ்திரி செய்து தரும் போது, உங்கள் மன கவலையை போக்கும் போது, உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் போது என, அவர்களிடம் காதல் வார்த்தைகளோடு சேர்த்து பாராட்டிப் பாருங்கள். அவர்களே வேண்டாம் என்று தான் கூறுவார்கள். ஆனால், காதல் அதிகரிக்கும்.
16-1447658466-4complimentstomakeyourspousefeellikesuperstar

நேரம் காலம் இன்றி உழைத்தல்
வீட்டிலே நேரம் காலம் இன்றி உழைக்கும் ஒரே ஜீவன் அம்மா / மனைவி தான். எனவே, அவர்களுக்கு நீங்களாகே ஓய்வெடுக்க சொல்லி கூறுங்கள். உதவி செய்யுங்கள், உடல் வலியாக இருந்தால் கை, கால் பிடித்து விடுவது கூட தவறல்ல. உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யாமல், வேறு யார் செய்வார்கள்.

16-1447658475-5complimentstomakeyourspousefeellikesuperstar

நான் பெருமையடைகிறேன்
நீ எனக்கு மனைவியாய் அமைந்ததை நினைத்து பெருமை அடைகிறேன். நீ எனக்கு கிடைத்த பெரும் வாழ்நாள் பரிசு என்று கூறிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். நாளை முதல் இல்லற வாழ்க்கையில் நிறைய சிறு சிறு மாற்றங்கள் தெரியும், சண்டைகள் குறையும்
Share.
Leave A Reply