மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு மட்டிக்கழியில் உள்ள வாவியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

batti-tank-body1நேற்று இரவு 7.30மணியளவில் மட்டிக்கழி வாவிப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் கரடியனாறு பகுதியை சேர்ந்த 57வயதுடைய திருஞானச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

batti-tank-body2கரடியனாறு பகுதியை சேர்ந்த இவர் நாவலடியில் உள்ள உறவினர்களின் வீட்டில் வந்து தங்கியிருந்ததாகவும் பின்னர் நேற்று வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

batti-tank-body3மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply