கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம்  உயர்தர பரீட்சை பெறுபேறு  வெளியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்திருந்தபோதும் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

எனினும் தற்போது பெறுபேறுகள் வெளியாகி இருக்கின்றன.

இதனை   http://www.doenets.lk/exam/home.jsf என்ற பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர் இணையத்தளத்திலும்  பார்வையிடமுடியும்.

இதேவேளை, இந்த பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள்திருத்தம் செய்வதற்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பாக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்ள முடி யும்
1911
011 2 27 84 208
011 2 27 84 537
011 314 0 314
011 3 188 350

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 69 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

manavikal

2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை பார்வையிட
www.doenets.lk
அல்லது
www.results.exams.gov.lk/

எனும் இணையத் தளங்களில் பார்வையிடுங்கள்.

அல்லது கையடக்க தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள EXAM இடைவெளி AL இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

அல்லது அனைத்துவிதமான கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிய EXAMS இடைவெளி சுட்டெண் என டைப் செய்து

7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch

மேற்குறிப்பிட்ட வலையமைப்புகளின் இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.

இன்று (03) வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சையில் அதிகூடிய இஸட் புள்ளிகைளப் பெற்று நாடாளவிய ரீதியில் முதலிடம் பெற்றோரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வர்த்தக பிரிவில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற அகீல் மொஹமட் நாடாளவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் குருணாகலை மலியதேவ வித்தியாலயத்தின் மாணவராவார்.

அத்துடன் கணித பிரிவில் மட். வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி எஸ்.நிசாங்கனி 4ஆம் இடம் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பாலசுப்ர மணியம் ஞானகீதன் 3ஆம் இடத்தையும், கலை பிரிவில் கொழும்பு பெண்கள் கல்லூரியின் பாதிமா அமீரா இஸ்மாயில் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞான பிரிவு

1ஆம் இடம் – தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி பெண்கள் பாடசாலை.

2ஆம் இடம் – ஜே.எம்.எம். முன்சிப் – புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான வித்தியாலயம்.

3ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா பெண்கள் பாடசாலை.

கணித பிரிவு

1ஆம் இடம் – தசுன் ஜயசிங்க – கொழும்பு ரோயல் கல்லூரி.

2ஆம் இடம் – நதீஷான் திசாநாயக்க – குருணாகலை மலியதேவ ஆண்கள் பாடசாலை.

3ஆம் இடம் – சச்சின் நில்மந்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்.

4ஆம் இடம் – எஸ்.நிசாங்கனி – மட். வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை.

பொறியியல் தொழில்நுட்பம்

1ஆம் இடம் – சானக அநுருத்த – மாத்தளை புனித தோமஸ் கல்லூரி.

2ஆம் இடம் – இராஷ புத்திக – கொழும்பு ஆனந்தா கல்லூரி

3ஆம் இடம் – பாலசுப்ர மணியம் ஞானகீதன் – யாழ்ப்பாணம் இந்து கல்லூரி

உயிரியல் தொழில்நுட்பம்

1ஆம் இடம் – நவோதினி மாரசிங்க – பண்டாரவளை தர்மபால மகா விதியாலயம்.

2ஆம் இடம் – கருணை நாயகம் ரவீகரன் – யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி.

3ஆம் இடம் – உபுலி அனுக்தரா – கேகாலை ஸ்வர்ணஜயந்தி மகா வித்தியாலயம்.

கலை பிரிவு
1ஆம் இடம் – ஜீவான நயனமாலி – குருணாகலை மலியதேவ பெண்கள் பாடசாலை.

2ஆம் இடம் – நிராஷா குலரத்ன – கண்டி புஷ்பதான பெண்கள் பாடசாலை

3ஆம் இடம் – பாத்திமா அமீரா இஸ்மாயில் – கொழும்பு பெண்கள் கல்லூரி

Share.
Leave A Reply