அது கடந்த புதன்­கி­ழமை நேரம் எப்­ப­டியும் அதி­காலை 5.00 ஐ அண்­மித்­தி­ருந்­தது. கொழும்பு–கண்டி பிர­தான வீதியின் (ஏ.01) வரக்­கா­பொல, தும்­ம­ல­தெ­னிய சந்­தியில் ஒரு பாரிய சத்தம். மறு­க­ணமே அல்­லோல கல்­லோலம்.

அம்­பி­யூலன்ஸ் வண்­டிகள், பொலிஸ் வாக­னங்கள், முச்­சக்­கர வண்­டிகள், வேன்கள் என வைத்­தி­ய­சா­லையை நோக்கி படை­யெ­டுத்­தன.

ஆம், கடந்த வரு­டத்தின் இறுதி நாட்­களில் நடந்த மிகக் கோர­மான விபத்­தது.

அன்று அதி­காலை 3.30 மணி இருக்கும் அப்­போ­துதான் பிலி­யந்­தலை, பொல்கஸ் ஓவிட்­டவில் இருந்து பொலன்­ன­றுவை சோமா­வ­தியை நோக்கி ஒரு குழு யாத்­தி­ரைக்கு புறப்­பட்­டது.

சுஜித் நிரோஷன் அந்த பஸ்ஸை செலுத்தி பெலி­ய­கொடை, களனி, கட­வத்தை தாண்டி கம்­பஹா பிர­தே­சத்தில் உள்ள இன்­னொரு குழுவை பஸ்ஸில் ஏற்றும் போது எப்­ப­டியும் மேலும் ஒரு மணி நேர­மா­வது சென்­றி­ருக்கும். பின்னர் பொலன்­ன­று­வையை நோக்­கிய பய­ணத்தை அவர்கள் கம்­ப­ஹா­வி­லி­ருந்து தொடர்ந்­தி­ருந்­தனர்.

இத­னி­டை­யேதான் புனித மக்கா நக­ருக்கு உம்றா யாத்­திரை நிமித்தம் செல்ல தயா­ராகிக் கொண்­டி­ருந்த சம்மாந்துறையை சேர்ந்த பலர் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள கடந்த 29 ஆம் திகதி இரவு வேளையில் சம்மாந்துறையில் இருந்து பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஜன­வரி 01, 2016 முதல் கடவுச் சீட்டு கட்­ட­ணங்­களில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டு­வதால் 30 ஆம் திக­திக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்­வதே அவர்­களின் நோக்­க­மாக இருந்­தது.

அதன் படி சம்­மாந்­து­றை­யி­லி­ருந்து மூன்று வேன்­களில் இந்த குழு­வினர் கொழும்­பி­லுள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தை நோக்கி பய­ணத்தை ஆரம்­பித்­தனர்.

இந்­நி­லையில் டிசம்பர் 30 -ஆம் திகதி அதி­காலை ஆகும் போது அவர்கள் வரக்­காப்­பொல நகரை அடைந்­தனர். வரக்காபொ­லவில் தேநீர் அருந்­தி­விட்டு அவர்கள் மீண்டும் கொழும்பை நோக்கி செல்­ல­லா­யினர். எனினும் அவர்­களால் அங்­கி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் மட்­டுமே நகர முடிந்­தது.

ஆம், ஒன்றன் பின் ஒன்­றாக நகர்ந்த வேன்கள் மூன்றில் நடுவில் வந்த வேன், பொலன்­ன­றுவை புனித சோமா­வதி யாத்­தி­ரைக்­காக சென்று கொண்­டி­ருந்த பஸ்­ஸுடன் நேருக்கு நேர் மோதி­யது.

accidant-1மறு­க­ணமே வேன் சுக்கு நூறா­னது. விபத்து இடம்­பெ­றும்­போது குறித்த வேனில் சிறு­வர்கள் உள்­ளிட்ட 19 பேர் இருந்த நிலையில் அவர்­களில் 5 பேர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர்.

மற்­றொரு குழந்தை பின்னர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் வைத்து உயி­ரி­ழந்­தது.

வேன் சார­தி­யான சம்­மாந்­துறை நெச­வாலை பகு­தியை சேர்ந்த முஹம்­மது தம்பி அஹமத் இபாத் (வயது 29), வீர­முனை 03 பகு­தியை சேர்ந்த சின்­னத்­தம்பி பாத்­திமா பரூஸா (வயது 26), அவரின் 2 வயது மக­ளான சிராஜ் பாத்­திமா சாரா, செந்நெல் கிராமம் 02 பிரிவைச் சேர்ந்த 67 வய­து­டைய முஹம்­மது இப்­றாஹீம் ஹபீ­லதுல் நிஸா, சம்­மாந்­துறை 06 ஆம் பிரிவைச் சேர்ந்த உதுமான் லெப்பை நுஸ்ரத் ஜஹானி (வயது 27) மற்றும் 2 வய­தான பாத்­திமா நுஸ்ரா ஆகி­யோரே இவ்வாறு கோர விபத்­துக்கு பரி­தா­ப­க­ர­மாக பலி­யா­கி­யி­ருந்­தனர்.

இவர்­களை விட குறித்த வேனில் வந்த மேலும் 13 பேர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை, கேகாலை மற்றும் வத்­து­பிட்டி வல வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இத­னை­விட பஸ் வண்­டியின் சாரதி உள்­ளிட்ட 12 பேர் சிறு காயங்­க­ளுடன் வர­க்காப்­பொல வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர்­களில் பலர் சிகிச்­சையின் பின் வீடு திரும்­பி­யுள்­ளனர்.

விபத்­தை­ய­டுத்து ஸ்தலம் விரைந்த வரக்­கா­ப்பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜன­காந்த, போக்­கு­வ­ரத்து பிரிவின் பொறுப்­ப­தி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் உபாலி ஜய­திஸ்ஸ உப பொலிஸ் பரிசோதகர் ஜய­வர்­தன சார்­ஜன்­க­ளான பந்­துல, கான்ஸ்­ட­பிள்­க­ளான ரண­சிங்க உள்­ளிட்ட பொலிஸ் குழு இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

accidant-2

இதன்­போது வேன் சார­தியின் அபா­ய­க­ர­மான வாகன செலுத்தல் மற்றும் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமை ஆகி­ய­னவே விபத்­துக்­கான காரணம் என கண்­ட­றி­யப்­பட்­டது.

இது தொடர்பில் 12 வரு­டங்­க­ளாக சார­தி­யாக தொழில் புரியும் பஸ்­வண்டி சாரதி சுஜித் நிரோஷன், இந்த பஸ்­வண்டி உரி­மை­யா­ளரின் உற­வி­னர்­களை அழைத்துக் கொண்டே நான் பொலன்­ன­று­வைக்கு சென்று கொண்­டி­ருந்தேன்.

நாம் 4.45 மணி­யாகும் போது வாரக்­காப்­பொ­லயை அண்­மித்­தி­ருந்தோம். இதன்­போது சுமார் 100 மீற்றர் தூரத்தில் வேனொன்று வேக­மாக வரு­வதை அவ­தா­னித்தேன்.

நான் பஸ்ஸை பாதையின் விளிம்­பு­வரை ஓரம்­கட்டி செலுத்­தினேன். எந்­த­ள­வுக்­கெனில் பாதை ஓரத்தில் இருந்த பஸ்தரிப்பு நிலை­யத்­துக்கு நான் ஓரம் கட்­டி­யதில் சேதம் ஏற்­பட்­டது.

எனினும் பய­னில்லை. அந்த வேன் பஸ்ஸை வந்து மோதி­யது. எனக்கு அவ்­வ­ள­வுதான் ஞாபகம். நான் கண்­தி­றக்கும் போது வைத்­தி­ய­சா­லையில் இருந்தேன் என்றார்.

உண்­மையில் சம்­மாந்­து­றையில் இருந்து 29 ஆம் திகதி இரவு 9.30 மணிக்கே மூன்று வேன்­களில் சுமார் 35 பேர் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தை நோக்கி வந்­துள்­ளனர்.

இவர்கள் 30 ஆம் திகதி அதி­காலை 2.30 மணி­யா­கும்­போது உன்னஸ்­கி­ரிய பகு­தியை அடைந்­துள்­ள­துடன் அதன்­பின்­ன­ரேயே கொழும்பு நோக்கி பய­ணித்­துள்­ளனர்.

மூன்று வேன்­களில் வந்த இந்த குழு­வுக்கு சம்­மாந்­துறை பகுதி பள்­ளி­வாசல் ஒன்றில் இமா­மாக கட­மை­யாற்றும் ஆதம்­பா­வா­லாபிர் மெள­லவி தலை­மை­யேற்று அழைத்­து­வந்­துள்ளார். இந்­நி­லையில் விபத்து தொடர்பில் மௌலவி இப்­படி கூறு­கிறார்.

நான் மௌல­வி­யாக கட­மை­யாற்றும் அதே­நேரம் மக்கா யாத்­திரை செல்­வோ­ருக்கு கட­வுச்­சீட்­டுக்­களைப் பெற்றுக் கொடுக்கும் முகவர் பணி­யையும் கடந்த இரு­வ­ரு­டங்­க­ளாக செய்து வரு­கிறேன்.

அதன்­ப­டியே நாம் 3 வேன்­களில் கொழும்பு வந்தோம். நான் முத­லா­வது பய­ணித்த வேனில் இருந்தேன். எனினும் அடிக்­கடி பின்னால் வந்த இரு வேன்­க­ளுக்கும் அழைப்பை ஏற்­ப­டுத்தி விசா­ரித்து வந்தேன்.

அதன்­ப­டியே வரக்­காப்­பொல தாண்டி தும்­ம­ல­தெ­னிய பள்­ளி­வாசல் வரை வந்து வேனை நிறுத்­திய நான் தொலை­பேசி அழைப்பை எடுத்தேன். அதன்­போதே பின்னால் வந்த வேன் விபத்துக் குள்­ளா­கி­யுள்­ளதை அறிந்தேன்.

உட­ன­டி­யாக வேனை திருப்பி வரக்­காப்பொல பகு­தியை நோக்கி செலுத்­தினோம். எனினும் விபத்து இடம்­பெற்ற இடத்தில் பாரிய வாகன நெரிசல் இருந்­ததால் நடந்தே ஸ்தலத்தை அடைந்தோம். விபத்தை பார்த்­ததும் பலர் உயி­ரி­ழந்­தி­ருப்பர் என எனக்கு தோன்­றி­யது என்றார்.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் தான் உயி­ரி­ழந்த 6 பேரின் சட­லங்­களும் நேற்று முன்­தினம் சம்­மாந்­துறை ஜும்ஆபள்ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லையில் குறித்த தினம் சம்­மாந்­துறை எங்கும் ஒரே சோக­ம­ய­மா­கவே காட்­சி­ய­ளித்­தது. எங்கும் வெள்ளை நிற கொடிகள் பறக்­க­வி­டப்­பட்டு கடைகள் அனைத்தும் மூடப்­பட்­டி­ருந்­தன.

இரு வேறு இறை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பல்­வேறு கன­வு­க­ளுடன் சென்று கொண்­டி­ருந்த யாத்­தி­ரி­கர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மா­கவே உள்­ள­தாக குறிப்­பிடும் பொலிஸார் வேன் சார­தியின் நட­வ­டிக்­கையே விபத்­துக்கு காரணம் என குறிப்­பிட்­டனர்.

உண்­மையில் இலங்­கையில் என்­று­மில்­லா­த­வாறு வீதி விபத்­துக்­களால் ஏற்­படும் மர­ணங்கள் தொடர்பில் நாம் அடிக்­கடி கேள்­விப்­ப­டு­கின்றோம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை­யி­லான 10 வருட காலப்­ப­கு­தியில் 22677 பாரிய வாகன விபத்­துக்கள் கார­ண­மாக 24261 மனித உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் போக்­கு­வ­ரத்து தலை­மை­யக புள்ளி விப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

10 ஆண்டு காலப்­ப­கு­தியில் மொத்­த­மாக 363210 வாகன விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

எனினும் நேற்று முன்­தி­னத்­துடன் நிறை­வ­டைந்த 2015 ஆம் ஆண்டின் முதல் ஒன்­பது மாதங்கள் தொடர்­பி­லான பூரண புள்­ளி­வி­ப­ரத்­தின்­படி 2007 பாரிய விபத்­துக்­களில் 2171 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

எனினும் பிந்­திய மூன்று மாதங்­களில் பல உயிர்கள் வாகன விபத்­துக்கள் ஊடாக காவு கொள்­ளப்­பட்ட நிலையில் இதன் எண்­ணிக்கை சுமார் 2500ஐ எட்­டி­யி­ருக்கும் என நம்­பப்­ப­டு­கி­றது.

கடந்த வரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களின் தர­வு­களின் பிர­காரம் 614 பாத­சா­ரி­களும் 641 மோட்டார் சைக்கிள் சார­தி­களும் 137 மோட்டார் சைக்­கிளில் பின்னால் அமர்ந்து சென்­றோரும் 156 சார­தி­களும் 404 பய­ணி­களும் 206 துவிச்­சக்­க­ர­வண்டி செலுத்­து­ணர்­களும் 13 வேறு நபர்­க­ளு­மாக 2171 பேர் வாகன விபத்­துக்­க­ளுக்கு இரை­யா­கி­யி­ருந்­தனர்.

கடந்த வருடம் நிறை­வுக்கு வரும் போது இந்த எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. பொலிஸ் தலை­மை­யகம் வரு­டத்தின் இறுதி நாளன்று நண்­பகல் வெளி­யிட்ட அறிக்­கையின் பிர­காரம் மோட்டார் சைக்கிள் செலுத்­துனர் மற்றும் பின் இருக்­கையில் அமர்ந்து சென்­ற­வர்­களின் உயி­ரி­ழப்பு 1000 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமர சிறி சேனா­ரத்­னவின் தர­வு­களின் படி கடந்த வரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களில் பதி­வான 2171 விபத்து மர­ணங்­களில் 815 மர­ணங்­க­ளுக்கு மோட்டார் சைக்­கிள்­களே பொறுப்­பாகும்.

272 மர­ணங்­க­ளுக்கு லொறி­களும் 308 மர­ணங்­க­ளுக்கு முச்­சக்­கர வண்­டி­களும் 159 மர­ணங்­க­ளுக்கு வேன்­களும் 171 மர­ணங்­க­ளுக்கு தனியார் பஸ்­களும் 138 மர­ணங்­க­ளுக்கு கார்­களும் 56 மர­ணங்­க­ளுக்கு கெப் வண்­டி­களும் 54 இற்கு இலங்கை போக்­கு­வ­ரத்து சபை பஸ் வண்­டி­களும் 28 மர­ணங்­க­ளுக்கு துவிச்­சக்­க­ர­வண்­டி­களும் 24 மர­ணங்­க­ளுக்கு டாக்­டர்­களும் 35 மர­ணங்­க­ளுக்கு ஜீப் வண்­டி­களும் 6 மர­ணங்­க­ளுக்கு பவு­சர்­களும் 14 மர­ணங்­க­ளுக்கு கன்­ட­னர்­களும் பொறுப்புக் கூற­வேண்டும் என அறி­ய­மு­டி­கி­றது.

இத­னை­விட பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் ஆய்­வு­களின் படி கடந்த வரு­டத்தின் முதல் ஒன்­பது மாதங்­களில் இரவு வேளை­க­ளி­லேயே அதிக விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ளன. அதன்­படி அக்­கா­லப்­ப­கு­தியில் இரவு நேரத்தில் 998 விபத்­துக்­களும் பகலில் 929 விபத்­துக்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

2014 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்­களை எடுத்து நோக்­கும்­போது பகலில் 892 விபத்­துக்­களும் இரவில் 803 விபத்­துக்­களும் இடம்­பெற்­றுள்­ளதை காண முடி­கின்­றது. அதன்­படி இவ்­வ­ரு­டத்தில் இரவு பகல் என்­றில்­லாது விபத்­துக்­களின் சடு­தி­யான அதி­க­ரிப்பை காண முடி­கின்­றது.

இதே­நேரம் நாட்டில் பதி­வாகும் விபத்­துக்­களை மாகாண அடிப்­ப­டையில் பார்க்கும் போது மேல் மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வி­லான விபத்து மர­ணங்கள் பதி­வா­கின்­றன.

2015 முதல் ஒன்­பது மாதங்­களில் மட்டும் மேல் மாகா­ணத்தில் 607 மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ளன. வடமேல் மாகா­ணத்தில் 307 உம் தென்­மா­கா­ணத்தில் 266 மர­ணங்­களும் சப்­ர­க­முவ மாகா­ணத்தில் 209 மர­ணங்­களும் வட மத்­திய மாகா­ணத்தில் 214 மர­ணங்­களும் மத்­திய மாகா­ணத்தில் 160 மர­ணங்­களும் கிழக்கில் 143 மர­ணங்­களும் வடக்கில் 159 மர­ணங்­களும் ஊவாவில் 106 மர­ணங்­களும் குறித்த காலப்­ப­கு­தியில் விபத்­தினால் பதி­வா­கி­யுள்­ளன.

பொலிஸ் போக்­கு­வ­ரத்துப் பிரிவின் ஆய்வின் பிர­காரம் ஒரு நாளின் மாலை 6.00 மணிக்கும் இரவு 8.00 மணிக்கும் இடைப்­பட்ட இரு மணி நேரத்­தி­லேயே அதி­க­மான விபத்­துக்­களும் மர­ணங்­களும் சம்­ப­விக்­கின்­றமை தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 2015 முதல் 9 மாதங்­களில் இந்த நேரப் பகு­தியில் 315 பாரிய விபத்­துக்­களில் 331 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இதற்கு அடுத்­தப்­ப­டி­யாக மாலை 4.00 மணி­முதல் மாலை 6.00 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியும் இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியும் அதிக விபத்­துக்கள் இடம்­பெறும் நேர­மாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

எது எவ்­வா­றி­ருப்­பினும் இவ்­வாறு ஏற்­படும் பல விபத்­துக்­க­ளுக்கு கார­ண­மாக இருப்­பது அபா­ய­க­ர­மான முறையில் வாகனம் செலுத்­து­வதே என பொலிஸ் போக்­கு­வ­ரத்துப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன தெரி­விக்­கிறார்.

புள்ளி விப­ரங்­க­ளின்­படி கடந்த 2015 முதல் 9 மாதங்­களில் அபா­ய­க­ர­மாக வாகனம் செலுத்­தி­யதன் விளை­வாக 1029 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

வண்­டியை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் 230 பேரும் அதி­வே­க­மாக வாகனம் செலுத்­தி­ய­மையால் 287 பேரும் தவ­றான முறையில் முந்திச் செல்ல முற்­பட்­டதால் 138 பேரும் உரிய ஒழுங்­கையில் பய­ணிக்­கா­ததால் ஏற்­பட்ட விபத்­துக்­களில் சிக்கி 120 பேரும் பாது­காப்­பற்ற முறையில் பாதையில் வாக­னத்தை திருப்­பி­யதால் 87 பேரும்,

குடி போதையில் வாகனம் செலுத்­தி­யதால் 68 பேரும் சார­திக்கு நித்­திரை சென்­றதால் 35பேரும் பாத­சா­ரி­களின் கவ­ன­யீனம் கார­ண­மாக 28 பேரும் குறுக்கு வீதியில் இருந்து பிர­தான வீதிக்கு வாக­னத்தை செலுத்தும் போது 25 பேரும் பிர­தான வீதி­யி­லி­ருந்து குறுக்கு வீதிக்கு வாக­னத்தை செலுத்தும் போது 16 பேரும் இயந்­திர கோளாறு கார­ண­மாக 16 பேரும் பாதை சீர்­கேடு கார­ண­மாக ஒரு­வரும் குறித்த காலப்­ப­கு­திக்குள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அப்­ப­டி­யானால் இலங்­கையில் இடம்­பெறும் அனேக வாகன விபத்­துக்கள் பாது­காப்­பற்ற முறை­யிலும் கவ­ன­யீ­ன­மான முறை­யிலும் வாகனம் செலுத்­து­வதால் இடம்­பெ­று­கின்­றமை உறு­தி­யா­கின்­றது.

எனவே புதிதாய் பிறந்­துள்ள இந்த புது­வ­ரு­டத்­தி­லேனும் பலரின் கன­வு­களை சிதைக்கும் இத்­த­கைய வாகன விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்த சார­திகள், பாத­சா­ரிகள் என அனை­வரும் உறு­தி­பூண வேண்டும்.

பாதை ஒழுங்­கு­களை மதிப்போம் அனர்த்­தங்­களை தவிர்ப்போம்.

Share.
Leave A Reply