‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என யாராவது உங்களிடம் கூறினால் உங்கள் பிரதிபலிப்பு எப்படியிருக்கும்?
அமெரிக்காவைச் சேர்ந்த கலைத்துறை மாணவியொருவர் இது தொடர்பாக சமூக பரிசோதனையொன்றை நடத்தியுள்ளார்.
18 வயதான ஷியா குளோவர் எனும் இம்மாணவி, தனது பாடசாலையின் சக மாணவ மாணவிகள், ஆசிரியர்களை கெமராவுக்கு முன்னால் நிற்க வைத்து, படம்பிடிப்பதற்குத் தயாரானபோது “நான் கண்ட அழகான விடயங்களை படம்பிடித்துக்கொண்டிருக்கிறேன்” என அவர்களிடம் கூறினார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட பெரும்பாலானோர் பெரும் மகிழ்ச்சியடைவது அவர்களின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. இக்காட்சிகளை ஷியா குளோவர் வீடியோவில் பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சிகாக்கோவைச் சேர்ந்த ஷியா குளோவர் தனது வகுப்பின் ஒப்படைத் திட்டமொன்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.