ஸ்ரீலங்காவுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் சாதகமான குறிப்புடன் புதுவருடம் விடிந்திருக்கிறது!
ஜனவரி 9, 2016 ல் பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றும்படி முன்மொழியும் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.
தற்போது கருதியிருக்கும் அரசியல் நிர்ணய சபையானது, 1972ம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பை வரைந்த அரசியல் நிர்ணய சபையை விட வித்தியாசமானது.
சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அரசியல் கண்ணோட்டமானது புதிய அரசியலமைப்பு ஒன்றை வித்தியாசமானதாக இயற்றுவதாகும்.
கருத்தொருமித்த அணுகுமுறை ஒன்று பின்பற்றப்படும். அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு வழி நடத்தும் குழு, புதிய அரசியலமைப்பை வரைவதற்கு அரசியல் நிர்ணய சபைக்கு வழிகாட்டியாக உதவும்.
இது அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றதின் பின்னர் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும். அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் பாரளுமன்றத்திலும் மற்றும் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பின் பெரும்பான்மையாலும் நிறைவேற்றப்படும்.
புதிய அரசியலமைப்பின் முக்கிய நோக்கம் இனம் சார்ந்த நல்லுறவு மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பதாகத்தான் இருக்கும்.
இது தொடர்பான ஒரு முன் தேவையாக உள்ளது இனங்களுக்கு இடையேயான நீதி மற்றும் சமத்துவம். அந்தப் பின்னணியில் பொருத்தமான அதிகாரப் பகிர்வு ஏற்பாடு பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ வழிகளில் நிறுவப்படுவது அவசியம்.
மிகவும் முக்கியமாக இந்த அதிகாரப் பகிர்வு ஏற்பாடு நாட்டிலுள்ள அதிகப் பெரும்பான்மையினரால் இனம்,மதம் மற்றும் பிராந்தியம் என்கிற வேறுபாடுகளை களைந்து ஒப்புக்கொள்ளப் படவேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015ல் சீத்தா ஜெயவர்தன ஞாபகார்த்த உரையின்போது, புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காணவேண்டியது அவசரத் தேவையாக உள்ளது என வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் பின்வருமாறு கூறினார் – “பாராளுமன்றில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகப் பெரும்பான்மையாக உள்ள பாராளுமன்றத் தலைவர்கள் ஆகியோர் நீண்ட காலமாக இருந்துவரும் பிரச்சினைகளான தேசிய நல்லிணக்கம் மற்றும் இனம், மதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளையும் கொண்ட ஒரு தேசிய அரசாங்கம், நல்லிணக்கத்துக்கு சாதகமான சிறந்த பொறிமுறையை வழங்கவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்”.
“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நான் – இருவருமே 1977ல் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தவர்கள், நாங்கள் விரைவான ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்கூட ஒரு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியே பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த முறை இந்த வாய்ப்பை தவறவிட முடியாது மற்றும் தவறவிடக் கூடாது. இன்னொரு நேரம் இனி நிச்சயமாக இல்லை.
உதயமாகிவரும் கருத்தொருமிப்பு 1977ம் ஆண்டின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கட்டமைப்புக்குள் – அதிகாரங்களை மேலும் பரவலாக்கியுள்ள ஒரு ஒற்றையாட்சி அமைப்புக்குள் வேலை செய்வது என்பதாகும்.
இந்த அதிகாரப் பரவலாக்கத்தை, உள்ளுராட்சி சபைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச கிராம ராஜ்ய கேந்திரங்கள் ஊடாக அடிமட்டம் வரை கொண்டு செல்வதற்கு சாதகமாக ஆதரவு வழங்குபவாகளும் உள்ளனர்.
மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட வேண்டிய மேலதிக அதிகாரங்களை இனங்காண்பதுதான் தாமதமாகும் பணியாக உள்ளது”.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மாத்திரமில்லை ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான அங்கமாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக) தலைவரும் கூட. ஒரு ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் அதிகாரங்களை மேலும் பரவலாக்குவதற்கான கருத்தொற்றுமை உருவாகியுள்ளது என பிரதமர் தனது கருத்தை தெரிவித்திருப்பதில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கு சிங்களவர்களிடையே கருத்தொற்றுமை தோன்றியுள்ளது என்பதைக் காணமுடிகிறது.
பெரும்பான்மை சிங்களவர்களின் கண்ணோட்டம் மிகவும் முக்கியமாக இருந்த போதிலும், அது ஸ்ரீலங்காவின் பார்வையில் ஏகோபித்த கருத்து இல்லை.
வேறுவிதமான கருத்துக்களும் உள்ளன. சிறுபான்மை இனங்கள் மீது பெரும்பான்மையினர் தங்கள் கருத்தை திணிக்கும் கடந்த காலங்களுக்கு முரண்பாடாக, மிகவும் முதிர்ச்சியடைந்துள்ள தற்காலத்தில் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் கூட உட்படுத்தி ஒரு தேசிய கருத்தொருமிப்பை உருவாக்க வேண்டியது அவசியம்.
ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களின் கருத்தைப் பொறுத்தமட்டில் அவர்கள் இடைவிடாது பிரச்சாரம் செய்துவந்த சமத்துவமான அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் என்பது இந்தக் கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக பரிணாமம் அடைந்துவரும் தமிழர்களின் கருத்து, பிரதமர் சிந்தித்திருக்கும் அரசியல் தீர்வைவிட வித்தியாசமானதாகத் தோன்றுகிறது.
தமிழ் மக்களின் இலட்சியம் தங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் பிரதேசங்களில் அதிக சுயாட்சியை பெறுவதாகும்.
தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள சமீபகால அரசியல் முன்னேற்றங்கள் அடையாளப் படுத்துவது, கூட்டாட்சி வழியில் புதிய அரசியல் ஏற்பாடுகளை தேடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதனையே. பெடரலிசம் என்கிற வார்த்தை வெளிப்படையாக பயன்படுத்தாவிட்டாலும்கூட, பாதியளவு கூட்டாட்சிக்கு சமனான உச்சபட்ச அளவிலான அதிகாரப் பகிர்வு வலியுறுத்தப்படும்.
முதன்மையான அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) ஆகஸ்ட் 2015 தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடாக அது கோடிட்டு காட்டியிருந்தது இப்படி, – “கொள்கை ரீதியானதும் மற்றும் தனித்துவமான அரசியல் பிரிவுகளாகவும் ரி.என்.ஏ இன்றிமையாததாகக் கருதுவது தேசியப் பிரச்சினைக்கான பிரேரணை பிரதானமாக தொடர்புபட்டிருப்பது, ஆட்சி அதிகாரங்களை ஒரு பகிரப்பட்ட இறையாண்மை ஊடாக இந்த நாட்டில் வாழும் மக்களிடையே பகிரப்படுவதில்தான்.
பின்வரும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கிய அம்சங்கள், நியாயமான சமரசத்தை அணுகுவது, நிலையான சமாதானம் மற்றும் அனைத்து ஸ்ரீலங்கா மக்களின் முன்னேற்றம் என்பனவற்றை அடைவதற்கான அடிப்படைகள் ஆகும்”.
ரி.என்.ஏயின் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவிப்பது – “அதிகாரப் பகிர்வுக்கான ஒழுங்குகள, இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கூட்டாட்சி கட்டமைப்பில் ஒரு தனி அலகாக முன்னர் நிறுவப்பட்டு இருந்ததைப் போல தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் அனைத்து அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளிலும் பயனாளிகளாக இருக்க உரித்துடையவர்கள் ஆவார்கள். இது எந்த வகையிலும் எந்த மக்களுக்கும் எந்த இயலாமையையும் விளைவிக்காது”.
ஆகவே அரசாங்கம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ரி.என்.ஏ என்பனவற்றுக்கு இடையில் பொருத்தமான அதிகாரப் பகிர்வு கட்டமைப்பினைப் பொறுத்தமட்டில் கருத்து வேற்றுமை இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
அரசாங்கம் ஒரு ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் உயர்ந்த பட்ச அதிகாரப் பரவலாக்கத்தினூடாக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ள அதேவேளை ரி.என்.ஏயின் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் கூட்டாட்சி கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த வேறுபாடு எடுத்துக்காட்டாக விளக்குவது, ஒற்றையாட்சி – கூட்டாட்சி மாறுபாடு கடந்த காலங்களில் ஒரு சாத்தியமான அரசியல் தீர்வில் முன்னேற்றம் ஏற்படுவதுக்கு இடையூறாக இருந்துள்ளது என்பதை. தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை உட்பட மற்றும் ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன் மற்றும் மைத்திரி – ரணில் – குமாரதுங்க ஆகிய மூவர் கட்சிக்கு இடையேயுள்ள சிறந்த தனிப்பட்ட உறவுக்கு சாதகமான காட்சிக்கு தற்போதைய நிலைப்பாடு திரையிட்டு மறைக்கிறது.
தற்போது எந்தவித தோரணையை பின்பற்றினாலும் இரண்டு தரப்பினருக்கும் கலந்துரையாடல்களின் போதும் மற்றும் பேச்சு வார்த்தைகளின்போதும் ஒரு நெகிழ்வான அணுகுமுறையை பின்பற்ற ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த சுரங்கம் இருட்டாக இருக்கலாம் ஆனால் கடந்த காலங்களைப் போல இல்லாமல் அடுத்த முனையில் இப்போது நிச்சயமாக ஒரு வெளிச்சம் தெரிகிறது.
இந்தப் பின்னணியில் இந்தப் பத்தி, பெடரலிசம் என்கிற கூட்டாட்சியின் கருவைப்பற்றி தேசியம் மற்றும் சர்வதேசம் ஆகிய இரண்டினதும் பின்னணியில் கவனம் செலுத்த விரும்புகிறது.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா அரசியல் பயணத்தின் பின்னணியில் பெடரலிசம் அல்லது பெடரல் என்கிற வார்த்தை ஒரு கெட்ட வார்த்தை என்பது நன்கு அறிந்ததே.
சிங்கள கடும்போக்குவாதிகளின் கருத்தில் பெடரலிசம் என்பதை பிரிவினை வாதத்துக்கான ஒரு மறைமுகச் சொல்லாகவோ அல்லது தனிநாட்டுக்கு நாட்டப்படும் அடிக்கல்லாகவோதான் பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் தமிழ் ஈழம் என்பதை ஆதரிக்கும் கழுகுப்பார்வை கொண்ட தமிழர்களின் கருத்தில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது விற்பனை செய்யும் செயலாகக் கருதி அது நிராகரிக்கப்படுகிறது.
இதன்படி ஸ்ரீலங்கா அரசியலில் பெடரலிசம் என்பது உச்சரிக்கத் தகாத கெட்ட வார்த்தையாகிவிட்டது. உண்மையில் அது மிகவும் துயரமானது, பெடரலிசம் அல்லது பெடரல் யோசனை என்பதை அதன் தகுதி மற்றும் சிறப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாது மிகவும் முரட்டுத்தனமாகவும் மற்றும் கொடூரமாகவும் நிராகரிக்கப் பட்டுள்ளது.
பெடரல் யோசனை அத்தனை மோசமான ஒரு யோசனை அல்ல
ஒருவேளை பெடரல் யோசனை என அழைக்கப்படுவதற்கு தகுதி இருந்தபடியால்தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அவர்களுக்கு அதை அவதானிக்கத் தூண்டியது, “எல்லாவற்றையும் விட பெடரல் யோசனை என்பது அத்தனை மோசமான ஒன்றாக இல்லாது இருக்கலாம்”; என்று அவர் சொல்லியுள்ளார்.
இது 1990ல் உலகத்திலேயே அவர் ஒரு சக்திவாய்ந்த மனிதராக இருந்தபோது கூறியது. கியுபெக்கின் மொன்ட் ரெம்பிளான்ட்டில் நடந்த பெடரலிசம் பற்றிய கருத்தரங்கின் முடிவில் கிளின்டன் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
தற்செயலாக முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான காமினி லக்ஸ்மன் பீரிஸ் அவர்களும்கூட, ஒட்டவாவை தளமாகக் கொண்ட சம்மேளனங்களின் கருத்தரங்கில் முன்னோடியான இந்த தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருந்தார்.
அப்படியானால் பெடரல் யோசனை என்பது என்ன? ஒரு கருத்தில் அதன் கருவானது பல்வேறு தொடர்புபட்ட விடயங்களான,கூட்டாட்சி, கூட்டு; முறை, சம்மேளனம், ஒருங்கிணைப்பு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த உலகத்தில்தான் பெடரல் என்கிற கூட்டாட்சி முறை கிட்டத்தட்ட மிகவும் மோசமான கெட்ட வார்த்தையாக அரசியலில் மாறியுள்ளது.
வெவ்வெறு நாடுகள் மற்றும் வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு காரணங்களுக்காக இந்த கெட்ட வாhத்தையை கேட்டு முகம் சுளிக்கிறார்கள்.
எனவே இந்த கூட்டாட்சி யோசனை மறைமுகமாக கெட்டவார்த்தையை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ஒரு ரோஜாவானது இனிமையான மணம் வீசும், மற்றொரு பெயரை பெற முடியுமானால் அப்போது இந்த பெடரலிசம் என்கிற வார்த்தையும்கூட சுத்தமாக்கப்பட்டு பெடரல் யோசனையாக விவாதிக்கப்படலாம்.
ஒன்ராறியோவின் முன்னாள் பிரதமர், பாராளுமன்ற உறப்பினர் மற்றும் சம்மேளங்களின் பேரவையின் முன்னாள் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த கனடாவின் பொப் றே அவர்களை நான் இதற்கு மேற்கோள் காட்டலாம்.
இந்தப் பேரவையினால் வெளியிடப்பட்ட “கூட்டாட்சி நாடுகளின் கைநூல்” என்கிற புத்தகத்துக்கு அவர் எழுதியுள்ள முன்னுரையில் றே இதைச் சொல்லவேண்டியதாக இருந்தது – “கடந்த தசாப்தத்தில் கூட்டாட்சி யோசனையின் நலன்கள் பற்றி ஒரு ஆழமான மீள் எழுச்சி இருந்துவந்தது.
கூட்டாட்சி யோசனை என்கிற பதத்தை நான் தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் பெடரலிசம் என்கிற கூட்டாட்சிவாதத்தில் உள்ள வாதம் என்கிற பகுதி ஒருவகையில் விவாதம் மற்றும் புரிந்துணர்வு என்பனவற்றை மட்டுப்படுத்துகிறது”.
“ஸ்பெயினில் மத்திய அரசாங்கம் கூட்டாட்சி என்கிற சொல், இறையாண்மை அதிகாரத்தில் பாதிப்பை அடையாளப் படுத்துவதால் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை.
இதற்கு முரண்பாடாக ஸ்பெயினில் உள்ள கற்றலொனியன்சும்கூட இதைக் கேட்டு முகம் சுளிக்கிறார்கள் ஏனென்றால் அவர்களின் கண்ணோட்டத்தில் கற்றலோனியனின் தனியான அடையாளத்தையும் மற்றும் சுயாட்சி உரிமையையும் இந்த பெடரலிசம் என்கிற வார்த்தை போதுமானளவு வலியுறத்தவில்லை என்பதாக உள்ளது.
தென்னாபிரிக்காவின் முந்தைய நிறவெறி ஆட்சி, ஆபிரிக்கர்களின் சுதந்திர தாகத்தை முறியடிப்பதற்காக சில கூட்டாட்சி கட்டமைப்பை அமைத்தது.
அதனால் பெடரலிசம் கறுப்பர்களுக்கும் ஒரு கெட்ட வார்த்தையாக மாறியது. ஆபிரிக்காவின் தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதன்கண்ணோட்டம் “ஒரே தென்னாபிரிக்கா” என்பதாக இருந்தது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் புதிய அரசியலமைப்பை ஒரு கூட்டாட்சி அமைப்பாக விளக்க விரும்பவில்லை.
றே சொன்னதின் அர்த்தத்தை ஸ்ரீலங்காவாசிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். ஸ்ரீலங்காவில் உள்ள ஆழமான முனைவாக்கம் அடைந்த சமூகத்துக்கு கூட்டாட்சி என்பது நிச்சயமாக மோசமான கெட்ட வாாத்தையே.
பெடரலிசம் என்பதை பகிரங்கமாக அதரிக்க பலருக்கு நடுக்கமும் தயக்கமும் உள்ளது. இது துயரமானது ஆனால் கூட்டாட்சியை இருதரப்பினரும் காட்டிக்கொடுப்பாகக் கருதும் இத்தகைய ஒரு சூழ்நிலையில் அது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது.
ஒருவர் அதை நாட்டை துண்டாடவதற்கான சதி முயற்சியாகப் பார்க்கும் அதேவேளை மற்றவர் தேடிய முழு சுதந்திரத்துக்கும் குழிபறிக்கும் ஒரு சூழ்ச்சியாக அதைப் பார்க்கிறார்.
இனப் பிரிவின் இரு தரப்பிலும் உள்ள ஸ்ரீலங்காவாசிகள் பெடரலிசம் என்பதை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அதேவேளை மீதமுள்ள உலகத்தினர் இந்த கூட்டாட்சி யோசனையை புளித்துப்போன ஒன்றாகக் கருதுகிறார்கள்.
உலகின் பலவிதமான அரசியல் நோய்களையும் குணமாக்குவதற்கு பொருத்தமான மருந்தாக கூட்டாட்சி கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது.
பிரிவினையில் ஒற்றுமையை அடைவதற்கான உலகளாவிய கருவியாக அது கருதப்பட்டது. எல்லாச் சூழ்நிலைகளிலும் அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று பரிசோதனைகள் நிரூபித்தன. அதேவேளை கூட்டாட்சி ஒழுங்குகள் பல சந்தர்ப்பங்களில் இணக்கத்தன்மையை பிரயோகிக்க நிச்சயமாக உதவியது.
25 கூட்டாட்சி நாடுகளில் உலகின் 40 விகிதமான மானிடர்கள் உள்ளனர்
இன்று இருபத்தைந்து நாடுகள் கூட்டாட்சி மற்றும் பாதி கூட்டாட்சி அமைப்பு முறையை கொண்டுள்ளன.
ஏக வல்லரசான அமெரிக்கா தொடங்கி சின்னஞ்சிறு நாடுகளான சென்ட் கிற்ஸ் மற்றும் நேவிஸ் வரையும், வடக்கில் கனடா முதல் தெற்கில் மைக்ரோனேசியா வரையும், கிழக்கில் இந்தியாவிலிருந்து மேற்கில் சுவிற்ஸலாந்து வரையில் இதன் வீச்சம் உள்ளது.
இந்த நாடுகளிலுள்ள மொத்த சனத்தொகை உலகின் மொத்த மனித இனத்தின் 40 விகிதத்திலும் அதிகமாகும். அதற்கும் மேலாக சில நாடுகள் அவை கூட்டாட்சி நாடுகளாக இல்லாவிட்டாலும் பாதி கூட்டாட்சி முறை என்று சொல்லக்கூடிய விசேட நிருவாக ஒழுங்குகளைக் கொண்டுள்ளன.
ஆங்கில அகர வரிசைப்படி நோக்குவோமானால், ஆர்ஜன்ரீனா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம்,பொஸ்னியா மற்றும் ஹெர்ஸோஜோவினா, பிரெசில், கனடா, கமரூஸ், எத்தியோப்பியா, ஜேர்மனி, இந்தியா, மலேசியா, மெக்ஸிக்கோ, மைக்ரோனிசியா கூட்டாட்சி நாடுகள், நைஜிரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சென்ட் கிற்ஸ் மற்றும் நேவிஸ், தென்னாபிரிக்கா, ஸ்பெயின், சுவிற்ஸலாந்து, ஐக்கிய அரபு இராச்சியங்கள், அமெரிக்கா, வெனிசுவெலா, என்பன கூட்டாட்சி நாடுகள்.
பெரும்பாலானவை வெளிப்படையாகவே கூட்டாட்சியாக உள்ள அதேவேளை ஸ்பெயின் போன்ற நாடுகள் வெளிப்படையாக கூட்டாட்சியாக இல்லை, ஆனால் பெயரைத் தவிர உண்மையில் எல்லா விதத்திலும் அங்கு கூட்டாட்சி முறையே உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தனது சீத்தா ஜெயவர்தனா நினைவுரையில் தற்செயலாக ஸ்ரீலங்காவின் அதிகாரப் பகிர்வு முறைக்கு ஆஸ்திரியா சாத்தியமான ஒரு மாதிரியாக இருக்கும் என்று பேசியுள்ளார்.
கூட்டாட்சியாக இருந்தாலும் இதில் எந்த ஒரு நாடும் சரியாக ஒரேமாதிரி அதிகாரத்தை பகிரவில்லை. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நிருவாக ஒழுங்குமுறைகளையும் மற்றும் உள்ளக கட்டமைப்பையும் கொண்டுள்ளன.
அளவிலும் கூட அவை பெரியளவில் மாறுபடுகின்றன. ரஷ்யா குடியரசை கொண்டுள்ளதுடன் அதனுள் பல வகையான பிராந்தியங்களையும் கொண்டுள்ளது, இந்தியா மாநிலங்களையும் மற்றும் யுனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது.
சுவிற்ஸலாந்து மண்டலங்களை கொண்டுள்ள அதேவேளை ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா என்பன நகர அமைப்புகளைக் கொண்டுள்ளன. பெல்ஜியம் மூன்று பிராந்தியங்களையும் மற்றும் மூன்று கலாச்சார சமூகங்களையும் கொண்டுள்ள அதேவேளை ஸ்பெயின் சுயாட்சி பிரதேசங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா மாநிலங்கள், உள்ளக சுதந்திரம் கொண்ட மாநில ஒன்றியங்கள், உள்ளுர் சுயாட்சியுள்ள பிரதேசங்கள், ஒன்றிணைக்கப்படாத பிரதேசங்கள் மற்றும் உள்நாடு சார்ந்த அமெரிக்க பழங்குடி நாடுகள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. கனடா மாகாணங்கள், பிராந்தியங்கள், மற்றும் பழங்குடி அமைப்புகள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. வெனிசுவெலா மாநிலங்கள், பிராந்தியங்கள், கூட்டாட்சி சார்பு, கூட்டாட்சி மாவட்டங்கள் மற்றும் பல தீவுகளையும் கொண்டுள்ளது.
கூட்டாட்சி மற்றும் பாதி கூட்டாட்சி நாடுகளைத் தவிர கூட்டாட்சி அம்சங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட யுனியன் அமைப்புகளைக் கொண்ட நாடுகளும் உள்ளன. இந்த வகை அமைப்புக்கு சிறந்த உதாரணம் ஐக்கிய இராச்சியம், இது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து மற்றும் சுயாட்சியுள்ள ஐந்து தீவகளையும் கொண்டுள்ளது. இத்தாலி 15 சாதாரண மற்றும் 5 சுயாட்சி பிரதேசங்களையும் கொண்டு மற்றொரு உதாரணமாகத் திகழ்கிறது. நெதர்லாந்து 11 மாகாணங்களையும் ஒரு துணை மாநிலத்தையும் கொண்டது. ஜப்பான், அரசு தலைமையிலான 47 மாவட்டங்களையும், பிஜி தீவுகள் இரண்டு சமூகங்களின் கூட்டுக் குழுவையும், கொலம்பியா 23 திணைக்களங்கள், 4 நிருவாக அலுவலகங்கள் மற்றும் 3 துணை அலவலகங்களையும் கொண்டுள்ளன. யுக்ரேன் 24 நிருவாகப் பிரிவுகள், 2 பெருநகரங்கள் என்பனவற்றையும் மற்றும் சுயாட்சி அதிகாரமுள்ள கிரிமியக் குடியரசையும் கொண்டுள்ளது. சீன மக்கள் குடியரசு 22 மாகாணங்கள், 5 சுயாட்சிப் பிரதேசங்கள், 4 மாநகரசபைகள் மற்றும் விசேட நிருவாக பிரதேசங்களான ஹொங்கோங் மற்றும் மாகோ என்பனவற்றைக் கொண்டுள்ளது.
மற்றொரு நிகழ்ச்சியாக மாநிலக்குழுக்கள் மற்றும் துணை நாடுகளைக் கொண்ட நாடுகளும் உள்ளன. பூட்டான் இந்தியாவின் ஒரு துணை நாடு. நைன் மற்றும் குக் தீவுகள் சுவிற்ஸலாந்தின் துணை நாடுகள். நெதர்லாந்து அன்ரிலிஸ், சான் மரீனோ, லிச்சென்ஸ்ரியன், மொனாகோ என்பன முறையே நெதர்லாந்து, இத்தாலி, சுவிற்ஸலாந்து மற்றும் பிரான்ஸ் என்பனவற்றின் துணை நாடுகள். புயர்ட்டோ ரிக்கொ, மற்றும் வடக்கு மரியனாஸ், என்பன அமெரிக்காவின் துணை மாநிலக் குழுக்கள். மடீரியா,மற்றும் அஸொரஸ் தீவுகள் என்பன போர்த்துக்காலின் துணை மாநிலக் குழுக்கள். அதேபோல கிறீன்லாந்து பாரோ தீவுகள் டென்மார்க்கின் துணை மாநிலக் குழுக்களாகவும் உள்ளன. பிரித்தானியா, ஜேர்சி,கயுர்னெசி, மற்றும் ஐசல் ஒப் மான் போன்ற மாநிலக் குழுக்களைக் கொண்டுள்ளது. ஆலந் தீவுகள் பின்லாந்து நாட்டின் ஒரு துணை மாநிலக் குழுவாகும்
(தொடரும்)