அர­சியல் அமைப்பு திருத்த ஆலோ­ச­னைக்­கு­ழுவில் புலி­களின் ஆத­ரவு உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளனர். புதிய அரசியல் அமைப்பு தனி­ஈ­ழத்தை அமைக்கும் அடிப்­ப­டையில் அமையும் என பொது­ப­ல­சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்­ளது.

ஒற்றையாட்சி என்ற வார்த்­தை­யா­னது ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகி­யோ­ருக்கு விஷம் போன்­றது எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் இன்­று­வரை அந்த மாற்று அர­சியல் திருத்தம் குறித்து எந்­த­வித வரை­பு­க­ளையும் முன்­வைக்­க­வில்லை.

ஆனால் எவ்­வா­றான மாற்றம் வரும் என்­பது தொடர்பில் எமக்கு நன்­றா­கவே தெரியும். இப்­போதே இவர்கள் மாற்று அரசியல் அமைப்பு திருத்­தத்தை தயா­ரித்து விட்­டனர். இந்த வரைபில் பிரி­வி­னைக்­கான அனைத்து கொள்­கை­களும் உள்ள­டக்­கப்­பட்­டுள்­ளது என்­பதும் எமக்கு தெரியும்.

அதேபோல் இப்­போது நாடு மேற்­கத்­தேய நாடு­களின் அடி­மை­யாக மாறி­விட்­டது. அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா போன்ற நாடு­களின் முழு­மை­யான ஆதிக்கம் இன்று நாட்டை ஆக்­கி­ர­மித்­து­விட்­டது.

அதேபோல் எமது இரா­ணுவம் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுகள் அனைத்தும் உண்மை என்ற நிலை­மைக்கு இந்த அரசாங்கம் செயற்­பட ஆரம்­பித்­து­விட்­டது. அவ்­வா­றான நிலையில் நாட்­டையும் பிரித்து செயற்­பட இவர்கள் தயங்க மாட்­டார்கள்.

அர­சியல் அமைப்பு திருத்தும் தொடர்பில் ஆராயும் குழுவில் புலி­களின் ஆத­ரவு உறுப்­பி­னர்­களும் உள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

நோர்வே, கனடா நாடு­களை சேர்ந்த புலம்­பெயர் அமைப்­பு­களின் உறுப்­பி­னர்கள் சில­ரையும் இந்த ஆலோ­சனைக் குழுவில் உள்­ள­டக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் புலி­க­ளுக்கு தேவை­யான வகையிலேயே இந்த அர­சியல் அமைப்பு அமையும்.

மேலும் ஒற்றையாட்சி இலங்கை என்ற அர்த்தம் தரும் வகையில் இந்த அர­சியல் அமைப்பு அமை­யாது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகி­யோ­ருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒற்றையாட்சி என்ற வார்த்தை விஷத்தை போன்றதாகவே இருந்தது.

ஆகவே ஆட்சி மாற்றமும் சரியான தலைமைத்துவமுமே நாட்டை பாதுகாக்கும் என்றார்.

Share.
Leave A Reply