உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக, மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள புதிய ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது.
சிரியா ராணுவம் கைப்பற்றிய 8 மணி நேர வீடியோவை, ஸ்கை நியூஸ் சேனலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அளித்துள்ளது. இதில், ஒரு பகுதியில் ஐ.எஸ் உறுப்பினர்கள் சிலர் ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்குவது குறித்த பணியை காட்டுவதாகும்.
ஆனால் மனிதர் இருப்பது போன்ற உஷ்ண அடையாளங்களை காண்பிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் அதில் உள்ளடக்கி, ராணுவ, அரசு கட்டடங்களில் பாதுகாப்பு சோதனைகளை ஏமாற்றிக் கடக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது.
அதே போல் பயணிகள் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்களையும் அழிக்கும் தொழில்நுட்பங்களையும் வளர்த்து கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக உலகின் பலநாடுகளிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.
மேலும், தரை இலக்குகள் முதல் வான்வழி இலக்குகள் வரை தாக்கக்கூடிய ஏவுகணைகள் பயங்கரவாத இயக்கத்தின் கையில் கிடைத்தால், அதுதான் பயங்கரவாதத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்று ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வீடியோவை பார்க்க…
>
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐரோப்பாவில் படுகொலைத் தாக்குதல்களை முன்னெடுக்கும் முகமாக விஞ்ஞானிகளையும் ஏவுகணை நிபுணர்களையும் பணிக்கு நியமித்துள்ளனர்.
சிரிய ரக்கா நகரிலுள்ள ஜிஹாதி பல்கலைக்கழகத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் பாரிய நாசத்தை விளைவிக்கும் நகரும் குண்டுகளாகப் பயன்படுத்தக் கூடிய வாகனங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சாரதியற்ற கார்களை உருவாக்குவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சிகளானது ஐரோப்பிய நாடுகளிலுள்ள தீவிரவாதிகளின் முகாம்களுக்கு கடத்தப்பட்ட பின்னர், அவற்றிலுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களும் தமக்கென சொந்தக் கார் குண்டுகளை தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தீவிரவாதிகள் பயணிகள் ஜெட் விமானங்களைத் தாக்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களையும் விருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி காணொளிக் காட்சியில் சாரதியற்று செலுத்தப்படக் கூடிய கார் உரிய இலக்கை நோக்கிச் சென்று எவ்வாறு பாரிய சேதத்தை விளைவிக்கும் என்பது உயர் தராதரத்துடன் படமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் ஆலோசகர்களில் ஒருவரான மேஜர் கிறிஸ் ஹன்டர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளிக் காட்சி பெரிதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக அவர் கூறி னார்.
மேலும் அந்தக் காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தரையிலிருந்து வானுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான பற்றறிகளை தயாரிப்பதுவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
According to the film clips, an IS team has produced fully-working driver-free cars which can be packed with explosives and driven into a target, causing horrific damage.
According to the film clips, an IS team has produced fully-working driver-free cars which can be packed with explosives and driven into a target, causing horrific damage