கை ரேகை ஜோதிடம் பார்க்கும் போது பெரும்பாலும் ஜோதிடர்கள் உள்ளங்கைகளில் அமைந்திருக்கும் வரிகளை கண்டு தான் ஒருவரது வாழ்க்கையின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்க் காலத்தை பற்றி குறிப்பிட்டு கூறுவார்கள்.
மற்றும் இந்த கை ரேகை ஜோதிடத்தின் மூலம், ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறப்படுகிறது.
10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? – தெரிந்துக் கொள்ளுங்கள்! ஆனால், உள்ளங்கை ரேகைகள் மட்டுமின்றி கை மணிக்கட்டு பகுதியில் அமைந்திருக்கும் வரிகளை வைத்தும் கூட ஒருவரின் வாழ்க்கை, ஆயுள், ஆரோக்கியம், தொழில் போன்றவை பற்றி கூற முடியும் என கூறுகிறார்கள்.
அது எப்படி மற்றும் உங்கள் மணிக்கட்டு வரிகள் உங்கள் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என இனிக் காணலாம்…

08-1452234701-bf39c769-6e1c-440f-b3b8-cd8d05ed4c57

ரேகை / வரிகள் பொதுவாக கைகளில் குறுக்கும், நெடுக்குமாக அமைந்திருக்கும் கை ரேகைகள் வைத்து தான் ஜோதிடம் கூறப்படும்.
ஆனால், நமது கை மணிக்கட்டில் இருக்கும் வரிகளை வைத்தும் கூட ஆரோக்கியம், உறவுகள் மற்றும் வாழ்க்கையை பற்றி கூறலாம். உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் மணிக்கட்டிலும் கூட ஓரிரு வரிகள் ரேகை போன்று அமைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று கூறுகிறார்கள்.

08-1452234695-b06b5127-1f29-403c-b791-567f5b1bf24a
மணிக்கட்டு இரகசியங்கள்
இதை மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்றும் கூறுகிறார்கள். இந்த மணிக்கட்டு வரிகளை வைத்து நமது ஆயுளை கூட கூறமுடியும் என்கிறார்கள்.

08-1452234690-b5e9757b-c767-4674-bfd0-658bc036271d

எண்ணிக்கை
உங்கள் கை மணிக்கட்டு ரேகை வரிகள் எவ்வளவு இருக்கின்றன என முதலில் எண்ணுங்கள். ஒரே ஒரு வரி தான் இருக்கிறது எனில், அவரது ஆயுள் 25- 35 எனவும், இரண்டு வரிகள் இருக்கிறது எனில் 45 – 57 எனவும், மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் 85 வயது ஆயுள் எனவும் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். பொதுவாக அனைவருக்கும் இரண்டு முதல் மூன்று வரிகளும், அரிதாக சிலருக்கு ஒன்று அல்லது நான்கு வரிகளும் இருக்கும்.

08-1452234685-a65321d3-f9d8-47df-9ce9-cbf5c421a8ab

பெண்களுக்கு
பெண்களுக்கு மணிக்கட்டு வரிகளில் நெளிவு சுளிவுகளுடன் இருந்தால் அவர்களுக்கு மகளிர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. மற்றும் கருத்தரிக்கும் போதும் அவர்கள் சற்று சிரமப்படுவார்கள். மாதவிடாய் நாட்கள் தள்ளி போவது போன்ற கோளாறுகளும் நிகழலாம்.
08-1452234673-63e9c224-3aee-40e6-aabd-b0ac01c65b9a

ஆண்களுக்கு
ஆண்களுக்கு முதல் மணிக்கட்டு வரி நெளிவி சுளிவுடன் இருந்தால், அவருக்கு சிறுநீர், புரோஸ்டேட் மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் ஏற்படலாம்.

08-1452234706-d3370fc5-37da-4114-b9ee-23cfecc28302

இரண்டாவது மணிக்கட்டு வரி
இரண்டாவது மணிக்கட்டு வரி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறித்தது. இந்த வரி தெளிவாக, எந்த பிரிவுகளும் இன்றி இருந்தால் உங்களுக்கு நிறைய நல்லவை நடக்கும் என்றும், பிரிவுகள் இருக்கும் சமயத்தில் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

08-1452234668-7a1bbf79-6329-4bfd-a43b-fdaa598a2d18

மூன்றாவது வரி
இந்த மூன்றாவது மணிக்கட்டு வரி உங்களது தொழில் மற்றும் வேலையை குறிப்பது. இந்த வரி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இவரது தொழில் மற்றும் வேலைகளில் எப்போதுமே ஏறுமுகமாக காணப்படுவார் என்று கூறுகிறார்கள்.

08-1452234711-d481158e-ed9c-4f30-9ccb-c753b37a7d7a

நான்காவது வரி
நான்காவது வரி இருப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த வரி இருந்தால் அது மூன்றாவது வரியுடன் இணை வரி போல தான் இருக்கும். இது மூன்றாவது வரிக்கு பலமாக அதாவது, உங்கள் தொழில் மற்றும் வேலை ரீதியான செயல்பாடுகளுக்கு வலுவளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நான்கு வரிகள் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் மரணம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.

08-1452236604-braceletlinescover
முக்கிய குறிப்புகள்
முதல் வரி தடித்தும், இரண்டாவது மூன்றாவது வரி சற்று மெல்லிசாகவும் இருந்தால் அந்த நபர் குழந்தை பருவத்தில் செழிப்பாகவும், நடுவயதில் சற்று பின்தங்கி மேலும், கடைசியில் மீண்டெழுந்து வரும் நபராக இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.

08-1452234723-f5ce33a1-4e8a-4bed-a885-bba7812cba40

முக்கிய குறிப்புகள்
மணிக்கட்டு வரிகள் அமைந்திருக்கும் இடத்தில் சங்கிலி போன்ற தோற்றம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் போராட்டங்கள் நிறைந்திருக்கும், ஆயினும் அவர்கள் அந்த பயணத்தை விரும்பி மேற்கொள்வார்கள்.

08-1452234723-f5ce33a1-4e8a-4bed-a885-bba7812cba40 kaii
Share.
Leave A Reply