ஐந்து பிள்­ளை­க­ளுக்கு தாய் ஒருவர் தனது கள்ளக் காத­ல­னுடன் இணைந்து தனது சொந்தக் கண­வ­னை கொலைசெய்த அதிர்ச்சிகர சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் மண்வெட்டியால் தாக்கியே இக்கொலையை புரிந்துள்ளார். அதி­க­மான மதுவை அருந்தக் கொடுத்து பின்னர் இக்கொலையை அவர் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண­வனைப் படு­கொலை செய்த மனை­வியும் அவ­ரது கள்ளக் காத­லனும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது பிள்­ளை­க­ளை, கண­வ­னையும் கைவிட்­டு­விட்டு இளம் வயது கள்ளக் காத­ல­னுடன் சென்று தனி­யாக வீடொன்றில் வசித்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் தன் மனை­வியும் அவ­ளது காத­லனும் நகரில் நிற்­பதை அவ­தா­னித்து அவர்­க­ளிடம் சென்று கணவன் அறி­வு­ரை­கூறி பிரச்­சி­னை­களை கூறி­யுள்ளார்.

அவர்கள் இவரை சாது­ரி­ய­மாகப் பேசி வீட்­டிற்கு அழைத்து வந்து மது அருந்தச் செய்து மண்­வெட்­டியால் வெட்­டியும் தாக்­கியும் கொலை செய்­துள்­ளனர்.

பொலிஸார் இவர்­களை கைது­செய்து நாவ­லப்­பிட்­டி பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதிவான் இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply