l
26இந்திய தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17-01-2016) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் கல்வியங்காடு சந்தி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அவரின் நண்பரும் தீவிர ரசிகருமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றியும் மாற்றுத்திறனாளிகள் நண்பர்கள் ஏழைவறியவர் போன்றவர்களுக்கு ஆடை மற்றும் சிறு பண உதவியையும் இந்நிகழ்வில் வழங்கியிருந்தார்.
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் கருத்து தெரிவிக்கையில்
யாழ்ப்பாணத்தில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் எம்.ஜி.ஆர் உருவசிலையை அமைத்ததாகவும் உலகமே போற்றும் தமிழன் என்றும் நாங்கள் மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்த்தவர். தற்போதய தமிழ் அரசியல் தலைமைகள் மக்களுக்கு உதவ முன்வருபவர்கள் அல்ல குறிப்பாக கோப்பாய் பகுதிக்கு கிடைத்த நிதி உதவி வடக்கு மாகாணசபையால் திரும்பி சென்றிருப்பதாகவும் எந்த கட்சி என்றாலும் ஒற்றுமையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் .
தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மனிதாபிமானம் நிறைந்த ஒரு சிறந்த மனிதர் ஈழத்து மக்களின் குறைகளை நிச்சயம் நிவர்த்தி செய்ய கூடியவர் எங்களுக்கு தற்போது தெளிவாக தெரிகின்றது.
தமிழ் அரசியல் தலைமைகள் தீர்வு திட்டங்கள் கிடைக்கின்ற போது ஒற்றுமையாக மக்களுக்க செயற்பட வேண்டும் அரசியல் கைதிகள் அகதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மீள்குடியேற்றங்களை செய்யவேண்டும் முன்னால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி திட்டங்களை மத்திய அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் தொண்டர்கள் அப்பகுதி மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.!