லண்டன்: எம்.ஹெச்-370 என்ற வார்த்தையைக் கேட்டாலே இனம் புரியாத சோகம் ஏற்படும் அளவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் விமானப்பயனிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவதும் பயணிகளின் பயத்திற்கு காரணமாகவுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொறியாளரான டடரென்கோ விளாதிமிர் நிகோலேவிச் கடந்த மூன்று வருடங்களாக பாடுபட்டு ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் விமான விபத்துக்களே இருக்காது என்று நினைக்குமளவு இவரது கண்டுபிடிப்பு துல்லியமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த வீடியோ: