ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு காஸல் நகரத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து அனர்த்தத்தில் ஈழ தமிழர் ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சுதுமலையை சேர்ந்த 02 பெண் பிள்ளைகளின் தந்தையான நல்லையா பத்மநாதன் – வயது 48 என்பவரே இறந்து உள்ளார்.
சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து வந்து இருந்த காஸலில் பீஸா உணவகம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார்.
சம்பவ தினம் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீஸா விநியோகிக்க மனைவி சகிதம் காரில் சென்று கொண்டிருந்தபோதே விபத்து நேர்ந்தது.
இவர் மிக நிதானமாக வாகனத்தை செலுத்தி சென்று கொண்டிருந்தபோதிலும் பின்னால் நவீன ரக காரில் வந்த 18 வயது இளைஞன் ஒருவர் இடித்து விட்டார். இதனால் பத்மநாதனின் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இன்னொரு காருடன் மோதி மரத்துடனும் இடிபட்டது.
ஸ்தலத்திலேயே பத்மநாதன் இறந்து போனார். மனைவிக்கு பலத்த உட்காயங்கள்.
பிரஸ்தாப இளைஞன் அடங்கலாக இவ்விபத்தில் மொத்தம் 07 பேர் காயப்பட்டு இருக்கின்றனர்.
இளைஞன் புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.
பத்மநாதனின் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் மரணச் சடங்கை நடத்துவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
குடும்பத்தினரிடம் சடலத்தை கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
a href=”http://ilakkiyainfo.com/wp-content/uploads/2016/01/pathmanathan_011.jpg”>