சவூதி அரே­பிய அரச குடும்­பத்தில், 33 வரு­ட­கா­ல­மாக சார­தி­யாக பணி­யாற்­றிய இலங்­கையர் ஒரு­வ­ருக்கு அரச குடும்­பத்­தினர் விமரி­சை­யான பிரி­யா­விடை அளித்­துள்­ளனர்.

மேற்­படி சாரதி 76 வய­தான “வத்தி” என இனங்காணப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பி­யாவின் சப்க் பத்­தி­ரிகை தெரிவித்துள்ளது.

இவர் முஸ்லிம் அல்­லாத ஒருவர் என்­பது குறிப்பிடத்­தக்­கது.

சவூதி அரச குடும்­பத்­தினர் அவரை சமி என செல்­ல­மாக அழைக்­கின்­றனர்.

14303articles109-511அரச குடும்­பத்தில் 33 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி ஓய்வு பெறும் அவரை கௌர­விக்கும் வகையில் மாபெரும் விருந்­து­ப­சார வைபவ­மொன்று நடத்­தப்­பட்­டது.

தலை­நகர் ரியாத்­தி­லுள்ள, இள­வ­ரசர் அப்துல் ரமன் பின் பர்ஹான் அல் சௌத்தின் மாளி­கையில் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு இப்­ பி­ரி­யா­விடை நடை­பெற்­றது.

அரச குடும்ப முக்­கி­யஸ்­தர்கள் பலர் இவ்­வை­ப­வத்தில் பங்­கு­பற்­றினர். அரச குடும்­பத்­தி­ன­ருக்­காக பணி­யாற்­றி­ய­போது, அக்­ குடும்­பத்தின் ஓர் அங்­கத்­த­வ­ரா­கவே தான் உணர்ந்­த­தா­கவும் இதுவே நீண்­ட­காலம் இப் ­ப­ணியில் நீடிப்­ப­தற்கு உந்­து­த­லாக இருந்­தது எனவும் சமி தெரி­வித்­துள்ளார்.

“எனது மனை­விக்கு நான் அனுப்­பிய 10,000 சவூதி றியால்­களை எனது உற­வினர் ஒருவர் திரு­டிக்­கொண்­ட­போது இள­வ­ரசர் மேற்­கொண்ட மனி­தா­பி­மான செயற்­பாட்டை என்னால் மறக்க முடி­யாது.

இவ்­விடயம் குறித்து இள­வ­ரசர் அறிந்­த­வுடன் என்னை அழைத்து மேற்­படி பணத்தை எனக்கு அவர் கொடுத்தார்” என சமி தெரி­வித்­துள்ளார்.

14305articles109-510“இங்கு எனக்கு அர­வ­ணைப்பு, பாசம், மரி­யாதை அனைத்தும் கிடைத்­தன. நல்ல வித­மாக நான் நடத்­தப்­பட்டேன்.

இள­வ­ரசர் என்னை எப்­போதும் இள­வ­ரசர் சமி என வேடிக்­கை­யாக அழைப்பார்” என சமி தெரி­வித்­துள்ளார்.

இள­வ­ரசர் அப்துல் ரஹ்­மானின் பேரனும், சவூதி தொழிற்­துறை திட்­டமிடல் அபி­வி­ருத்தி நிதி­யத்தின் திட்­ட­மிடல் பணிப்­பா­ள­ரு­மான எமிர் மன்சூர் பின் சௌத் அல் சௌத் கூறு­கையில், “நான் இங்­கேயே பிறந்து வளர்ந்தேன். சமி இல்­லா­தி­ருப்­பதை என்னால் கற்­பனை செய்து பார்க்க முடி­ய­வில்லை.

இக்­கு­டும்­பத்தில் ஒரு­வ­ரா­கவே அவரை எப்­போதும் நான் கரு­தினேன்” எனக் கூறி­யுள்ளார்.

14305imageபல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­ய­ரான யூசுப் அல் ஹதிதி கூறு­கையில், “நீண்ட காலம் சேவை­யாற்­றிய நிலையில் தான் ஓய்வு பெற விரும்­புவ­தாக சமி கூறி­ய­தை­ய­டுத்து, முழுக் குடும்­பத்­தி­னரும் கவ­லை­ய­டைந்தோம்.

அவரை இக்­கு­டும்­பத்தில் ஒரு­வ­ரா­கவே நாம் கரு­தினோம். விசு­வா­சமும் அர்ப்­ப­ணிப்பும் கொண்ட அவரின் சேவையைப் பாராட்டி அவ­ருக்கு விருந்­து­ப­சா­ர­மொன்றை நடத்த நாம் தீர்­மா­னித்தோம்” என்றார்.

சிலர் எண்­ணு­வதைப் போலல்­லாமல், சவூதி அரே­பி­யா­வி­லுள்ள நாம் அனைத்து மதங்கள், நாடுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. சமி ஒரு முஸ்லிம் அல்லர்.

அவரை நாம் பாராட்டி, மதிப்பளித்து நடத்தாமல் இருந்தால் அவர் 33 வருடங்கள் எம்முடன் இருந்திருக்க மாட்டார்” எனவும் பேராசிரியரான யூசுப் அல் ஹதிதி கூறினார

Share.
Leave A Reply